தமிழ் நாட்டின் தென் கோடி கிராமத்தில் மண் வாசனையோடு வளர்ந்து தற்போது கணினி வாசத்தோடு நகர(நரக)த்தில் வாழ்ந்து கொண்டிருக்கும் லட்சக்கணக்கான தமிழர்களில் ஒருவன்
Thursday, March 5, 2009
இசையும், தமிழும் இப்போதே இணையட்டும்!
இப்போதே கம்போசிங்கில் அமர்ந்துவிட மாட்டார்களா என்ற ஏக்கத்தை தந்திருக்கிறது இரண்டு மாபெரும் கலைஞர்களின் பேச்சு! 'நீராரும் கடலுடுத்த...' பாடலை போல உலகம் முழுவதும் உள்ள தமிழர்கள் வணங்குகிற மாதிரி ஒரு தமிழ் தாய் வாழ்த்தை எழுத வேண்டும். அதற்கு ரஹ்மான் இசையமைக்க வேண்டும் என்று கூறியிருந்தார் கவிப்பேரரசு வைரமுத்து.
அவர் எப்போது எழுதி தருகிறாரோ, அப்போதே அந்த பாடலை உருவாக்குவதற்கான பணியில் இறங்குவேன் என்று கூறியிருந்தார் இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான். இவ்விரு கலைஞர்களும் உருவாக்கப் போகும் இந்த பாடல் காற்றுள்ளவரை உலகமெல்லாம் இசைக்கப்படும் என்ற நம்பிக்கையும், ஆர்வமும் இப்போதே தமிழர்களிடம் நிறைந்துள்ளது.
இலக்கிய உலகிலும், இசையுலகிலும் கொடிகட்டி பறக்கும் இருவரும், அதற்கான நேரத்தை ஒதுக்குவது என்பது சற்று சிரமமான காரியம்தான். பல்வேறு பரபரப்புகளுக்கு இடையே இதையும் செய்து முடித்து சீக்கிரம் வெளியிட்டால், தமிழனின் ஆயுளை கூட்டிய புண்ணியம் கிடைக்கும் இவர்களுக்கு!
செய்வீர்களா, ஜாம்பவான்களே....?
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment