Thursday, March 5, 2009

ஐயோ ஐயோ , எப்பவுமே காமெடிதான்


சென்னை: அதிமுக கூட்டணிக்கு 40 எம்.பிக்கள் கிடைத்தால் போதும். அடுத்த பிரதமர் ஒரு தமிழர்தான். அந்த மாயாஜாலத்தை நான் நிகழ்த்திக் காட்டுகிறேன் என்று பேசியுள்ளார் ஜனதாக் கட்சித் தலைவர் சுப்ரமணியம் சாமி.

அனல் பறக்கும் அரசியல் களத்தை அவ்வப்போது ஜாலியாக்குவது சாமியின் தடாலடி பேச்சுக்கள்தான். அந்த வகையில், 40 எம்.பிக்கள் அதிமுகவுக்குக் கிடைத்தால், ஒரு தமிழரை பிரதமராக்கி விடுவேன் என்று கூறியுள்ளார் சாமி.

இதுகுறித்து அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், அதிமுக கூட்டணிக்கு தமிழகத்திலும், புதுவையிலும் 40 எம்.பிக்கள் கிடைத்து விட்டால் (அதாவது எல்லாவற்றிலும் அவர்களே ஜெயித்தால்) அடுத்த பிரதமராக ஒரு தமிழரை அமர வைப்பது எனது வேலையாகும். அந்த மாயாஜாலத்தை நான் நிகழ்த்திக் காட்டுவேன்.

உயர்நீதிமன்ற வக்கீல்கள் செய்து வரும் வேலைநிறுத்தம் சட்டவிரோதமானது. எனவே அவர்கள் மீது சுப்ரீம் கோர்ட் நீதிமன்ற அவமதிப்பு வழக்கை தொடர வேண்டும்.

உச்சநீதிமன்றம் வேலைக்குப் போங்கள் என்று கூறியும் அவர்கள் வேலைக்குப் போகாமல் ஸ்டிரைக் செய்து கொண்டுள்ளனர்.

லாகூரில் இலங்கை வீரர்கள் தாக்கப்பட்ட சம்பவத்தில் விடுதலைப் புலிகளுக்குத் தொடர்பு இருக்கிறது. அல் கொய்தா மற்றும் தலிபான்களுடன் விடுதலைப் புலிகள் கை கோர்த்துள்ளனர் என்று நான் ஏற்கனவே கூறியிருக்கிறேன். இப்போது அது உண்மையாகி விட்டது என்றார் சாமி.

ஐயோ ஐயோ!!!

No comments: