மக்களவைத் தேர்தல் அறிவிப்பு வந்ததால் தான் தா.பாண்டியன் பக்க மேளம் வாசிக்க, நல்லகண்ணுக்கள் நால்வகைப் படையுடன் உடன்வர, இலங்கை பிரச்சனைக்காக ஜெயலலிதா உண்ணாவிரதம் இருக்கிறார். தெருவெங்கும் போஸ்டர்கள்.தமிழகம் முழுவதும் கோடை வெயில் சுட்டெரித்து வருகிறது., இந்த நிலையில், இன்று காலை முதல் வானிலை அப்படியே தலைகீழாக மாறியது , ஜெயலலிதாவின் அந்தர் பல்டி நாடகத்த பார்த்து.
இன்னும் பாக்கி, டில்லி ஜந்தர் மந்தரில் சோனியா காந்தி இலங்கைத் தமிழர்களுக்காக உண்ணாவிரதம் இருக்கவேண்டியது மட்டுமே. அது முடிந்ததும் கொழும்பில் மஹிந்தா, கொத்தபாயா, பேசில் மூவரும் தமிழர்களின் நலனுக்காக உண்ணாவிரதம் இருப்பார்கள்.
பிறகு அனைவரும் சேர்ந்து, இதுவரை தமிழர்களுக்காக உண்ணாவிரதம் இருக்காத ஒரே ஒருவர் பிரபாகரன் மட்டுமே என்றும் அதற்கான காரணத்தைத் தமிழர்களே புரிந்துகொள்வார்கள் என்றும் சொல்லி முடித்துவிடுவார்கள்.
No comments:
Post a Comment