Friday, March 6, 2009

விஜய் மல்லையாவின் நாட்டுப்பற்றுக்கு சல்யூட்!


மகாத்மா காந்தி பயன்படுத்தியப் பொருட்களை இந்தியாவுக்கு மீட்டுவர மத்திய அரசு எவ்வளவோ முயற்சிகளை மேற்கொண்டும் பலனில்லாமல் போனது.
இந்தச் சூழலில் நியூயா‌ர்‌க்‌கி‌ன் பழ‌ம்பொரு‌‌ள் கா‌ட்‌சியக‌த்‌தி‌‌ல் உ‌ள்ள மகா‌த்மா கா‌ந்‌தி‌‌ பய‌ன்படு‌த்‌திய க‌ண்ணாடி, பா‌க்கெ‌ட் கடிகார‌ம், ஒரு ஜோடி கால‌ணிக‌ள், ஒரு த‌ட்டு, ஒரு குவளை ஆகிய பொரு‌ட்க‌ளை ஏலம் எடுத்ததுடன், அவற்றை தனது தாய்நாட்டுக்கே நன்கொடையாக அளிக்கிறார், இந்தியத் தொழிலதிபர் விஜய் மல்லையா!
மகாத்மா காந்தி பயன்படுத்திய ஐந்து பொருட்களை 18 லட்ச அமெரிக்க டாலர்கள் கொடுத்து, இந்திய தொழிலதிபர் விஜய் மல்லையா வாங்கியுள்ளார்.
இந்தியாவில் பிறந்து வெளிநாட்டில் தொழில்துறையில் வெற்றிக் கொடி நாட்டி, உலகச் செல்வந்தர்கள் பட்டியலில் இடம்பெற்று, தனது வாரிசின் திருமணத்துக்கு பல நூறு கோடி ரூபாய் செலவு செய்து தனது டாம்பீகத்தை உலகுக்கு உணர்த்தும் தொழிலதிபர்களுக்கு மத்தியில்….
தாய்நாட்டின் பாரம்பரியத்தைக் காப்பதற்காக ஏறத்தாழ பல கோடி ரூபாய் செலவில் காந்தியடிகளில் பொருட்களை மீட்டளித்துள்ள விஜய் மல்லையாவுக்கு சல்யூட்…!!!
அதேவேளையில், “டெல்லி உயர் நீதிமன்றத்தில் தடை உத்தரவு இருப்பதால், அரசு நேரடியாக ஏலத்தில் பங்கேற்க முடியாது. எனவே தொழிலதிபர் விஜய் மல்லையாவின் உதவியுடன் காந்தியின் பொருட்கள் இந்தியாவுக்கு கொண்டு வர முயற்சி மேற்கொள்ளப்பட்டது. காந்தியின் பொருட்களை கொண்டு வருவதற்கு பல்வேறு வகையில் போராடினோம். இது, ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசின் வெற்றியே,” என்று கலாச்சார துறை அமைச்சர் அம்பிகா சோனி இன்று காலை செய்தியாளர்களிடம் கூறியிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன என்பதையும் இங்கே பதிவு செய்கிறேன்.

No comments: