Wednesday, September 16, 2009

என்னத்த சொல்ல?

காதல் வயப்பட்ட என்னுடைய இரண்டு நெருங்கிய நண்பர்கள் . ஒருத்தன் காதலியால் நல்ல மாப்பிள்ளை கிடைத்ததும் ஏமாற்றப்பட்டான் நான்கு வருட காதல்.இன்னொருவன் 10 வருட காதலை வீட்டில் ஏற்பட்ட பிரச்சனையால் கழட்டிவிட்டு இன்னொருத்தியிடம் காதல் போதையில் திரிகிறான்.காதல்னா என்ன பாஸூ?

-------------------------------------------------------------------------------------------------
பெங்களூர் பதிவர் சந்திப்பு நடத்தலாம்னு ஜோ அண்ணத்தே சொன்னதும் சரினு சொல்லிட்டு. அன்னிக்காச்சும் எப்படியாவது பார்த்திரனும்னு நினைச்சுட்டு இருந்தா அன்னிக்குனு நண்பர்களின் அன்பு தொல்லையால் இண்டர்வீயுவுக்கு போனேன்.பிளான் பண்ண சந்திப்பும் நடக்கல,பிளான் பண்ணி போகாம போன இண்டர்வியுவும் விளங்கல

-------------------------------------------------------------------------------------------------
வெள்ளிக்கிழமை நண்பர்கள் கூட்டம் உபா கடையில் நடத்திகிட்டு இருக்கும் போது ஒருத்தர் தமிழ் பேசுவதை பார்த்துட்டு எந்த ஊர் அப்படினு கேள்விகளை கேட்டு இம்சைய போட ஆரம்பிச்சுட்டாரு.மதுரைனு சொன்னதும்எனக்கு அஞ்சாநெஞ்சனை தெரியும்,அவர் பெங்களூர்க்கு வந்தா என்னை பார்க்காம போகமாட்டாரு, என்ன பிரச்சனைனாலும் என்கிட்ட சொல்லுங்கனு செல் நம்பர் கொடுத்தார் வேற வழியில்லாமல் போனில் நோட் பண்ணுற மாதிரி நடிக்க வேண்டியதா போயிருச்சு.நல்ல வேளையா இன்னொரு அடிமை வந்து நான் சென்னைனு சொன்னதும் நைசா நாங்க கழட ஆரம்பிச்சோம் அப்போ என் காதுல எனக்கு தயாநிதிய....

-------------------------------------------------------------------------------------------------

நேற்று பார்த்த ஜுனியர் சிங்கர்ல சீனியர்கள்(ஆம்) வைச்ச பேருல ஜொள்ளு ஜக்கமா,நிக்காத நித்தியஸ்ரி,ஜிப்பா ஜிகிர்தாண்ட,சரக்கு சரவெடி.. நிறைய பேருக்கு பிளாக் புனை பேர் வைக்க அத பாருங்க..அப்புறம் விஜய் டிவிக்கு யாராச்சும் இந்த டிடி(கொசு) தொல்லை தாங்க முடியல மருந்து அடிச்சு விரட்டுங்கனு சொல்லுங்கப்பா.. முடியல...


Wednesday, September 2, 2009

நானும் ஒரு கையாலாகாதவன்


என்ன எல்லோருக்கும் தெரியுமா ஏற்கனவே .. இருந்தாலும் நானே ஒத்துக்கொள்கிறேன்.

பல நேரங்களில் என் கையாலாகதனத்தை கண்டு வெட்கி மனத்துயர் உற்றிருந்தாலும் இரண்டு நாட்களுக்கு முன் நடந்தவை என் மனதை வாட்டி எடுக்கிறது.அதன் வெளியேற்றமே இது.

நான் பள்ளியில் படிக்கும் போது நல்லா படித்தாலும் என் நண்பர்கள் வட்டாரம் திமிர் கெத்து சேட்டை படிப்புனா என்ன என்று கேட்ட்கும் பசங்களோடதான்.அவர்கள் நட்பு வகுப்பில் உள்ள மத்த பசங்களை ஓட்டுவதற்கும் ,அடிப்பதற்கும் , பயப்பட வைப்பதற்கும் தேவைபட்டது.முக்கியமா நம்மல நம்ம கூட்டத்த தவிர எவனும் என்னனு கூட கேள்வி கேட்க மாட்டார்கள்.அப்படி ஒரு கும்பல் என்னுடையது நான் மேல்நிலைப்பள்ளியில்
படிக்கும் போது. அதற்காக நான் வருந்தவோ வெட்க்கப்படவோ செய்யவில்லை அப்போது.என்னுடைய பள்ளியில் வன்முறை அடிதடி சாதாரணம் உபயம் மதம் மற்றும் ஜாதி.தினம் ஒரு நாள் சண்டைய பார்க்கலேனா அய்யோ இன்னிக்கு வடை போச்சேனு வருந்திய காலம் உண்டு.

ஒரு தடவை என் நண்பன் ஒருவன் அவனுடை நண்பர்கள் ஐவருடன் சேர்ந்து கீழ்பிரிவு மாணவனின் காலை விறகு கட்டையால் அடித்து உடைத்து அவனை இரண்டு வருடம் நடக்க முடியாமல் செய்தனர் .அப்பொழுதெல்லாம் என் நண்பன்தான் காலை உடைத்து என்று பெருமை(?)யுடன் சொல்லி கொண்டிருந்தேன்.(அவன் இதனால் தீண்டாமை பிரிவு வழக்கு பள்ளி மாற்றம் என பல இன்னல்களை சந்தித்து இன்று நல்ல நிலையில் இருக்கிறான்) . வேறொரு சமயம் என் நண்பன் பால் குடம் எடுத்தான் அவனுடன் சென்றிருக்கும்போது ஏற்பட்ட தகராறில் எங்கள் கூட்டம் விளாசுவதை பார்த்த போலீஸ் எங்கள் அருகில் வந்து விரட்டிய போது மிரண்ட என்னை தன்னருகில் இழுத்த மாலை போட்ட நண்பனால் தப்பித்தேன் இல்லைனா அன்னிக்கு போலீஸ் என் டங்குவாரா அத்திருப்பானுக.என் கூட்டத்தில ஒருத்தன் மாட்டிட்டான் அவன் பாதத்தில் போலிஸ் போட்ட ஒத்தடத்துக்கு ஒரு வாரம் நடக்க முடியாமல் திரிந்தான்.அப்பவும் அந்த அடிதடியா பெருசா சொல்லி கொண்டிருந்தேன் துளி கூட வருத்தம் இல்லாமல்.செங்கலால் இன்னொரு வகுப்பு மாணவனை மண்டைய உடைச்சது,ரோட்டில் சும்மா போன முப்பது வயசு ஆளை கன்னத்தில் பளீர் என்று விட்டது இப்படி சொல்லிக்கொண்டே போகலாம்.ஆனால் ஒன்றில் கூட நான் யாரையும் அடிச்சது இல்லை .சத்தியமாங்க நம்புங்க.வேடிக்கை மட்டுமே பார்த்தேன்.ஆனால் அப்போதெல்லாம் வெட்கப்படாத வயசு இன்று இதையெல்லாம் நினைத்து கூனி குறுக செய்கிறது.

நான் அலுவலகத்திற்க்கு பேருந்தில் செல்லும் போது ஐபாடில் பாட்டு கேட்பது வழக்கம்.அன்றும் அப்படியே. தீடிரென்று ஒருத்தன் என் மேல விழுந்தான் என்னனு பார்த்தா இரண்டு சிறுவர்கள்(1 அல்லது 2 பியூசி மாணவர்கள்) ஒரு இருபத்தைந்து வயது ஆளை குத்து குத்துனு இரண்டு பக்கமும் குத்துறாய்ங்க.அந்த ஆள் கண்ண பிடிச்சுட்டு உக்காந்துட்டார் அப்பவும் அவர்கள் விடலை , டிரைவர் வண்டிய நிப்பாட்டினதும் கண்டக்டர் அவர்கள் மூவரையும் இறங்க சொல்லிட்டார். அப்பொழுதுதான் அந்த ஆளை பார்த்தேன் இரண்டு கண்கள் முழுவதும் இரத்தம் எங்கிருந்து வந்ததுனு தெரியலே மூக்கிலும் இரத்தம் , பேருந்து படிக்கட்டு முழுவதும் இரத்தம்.பஸ்ஸில் இருந்த ஒருவரும் இதை தடுக்கவே இல்லை என்னையும் சேர்த்து.யார் மேல் தப்புனு தெரியல ஆனால் யார் தப்பு செய்திருந்தாலும் அந்த அளவிற்கு அடித்திருக்க கூடாது.சிறுவர்கள் வன்முறையில் ஈடுபடுகிறார்களே என்று அன்றுதான் வருத்தம் அடைந்தேன் . மேலும் சண்டை நடந்ததை வேடிக்கை பார்த்துவிட்டு அய்யோ இவ்ளோ ரத்தமா என்று நினைக்க மட்டும் செய்துவிட்டு அடிபட்டவரை மருத்துவமனைக்கோ அல்லது அவர்கள் அடிக்கும் போது தடுப்பதற்கோ எள்ளலவும் முயற்சிக்காத நான் கையாலாகவதன் தானே.

டிஸ்கி:
--------
போன வாரம் கூட ஒருத்தன் மச்சான் நம்மட்ட சண்டை போட புதுக்கோட்டைல இருந்து ஸ்கார்ப்பியோல வந்த நாலு பேரை புரட்டி எடுத்து,வண்டிய நொறுக்கி ஓட ஓட விரட்டினோம்ல என்று சொன்னபோது மச்சான் பெருமையா இருக்குனு சொன்னேன்.

Thursday, August 27, 2009

என்னத்த சொல்ல?

இரண்டு வாரங்களுக்கு முன்பு திருப்பதி சென்று வந்தேன் , பெங்களூர்ல இருந்து டிரெயின்ல கிளம்புனது முதல் பாக்குற அத்தனை பேரும் முகமூடி கொள்ளையர்கள் மாதிரி முகமூடிய போட்டு பயமுறுத்திக்கிட்டே வந்தாங்க. திருப்பதி போனாலும் நிக்கிற போலிஸ் ,சீட்டு கொடுக்குற அலுவலர் ,ரூம் ஒதுக்குற பணியாளர் , க்யூல பக்கத்துல நிக்கிறவர் முதல் பூசாரி வரை முகமூடி மயம்தான்.. பாவம் ஏழுமலையானுக்கு மட்டும் மாட்ட மறந்துட்டாங்க..

ஒரு வேளை ஏழுமலையான் அவரே பார்த்துக்குவாருனு விட்டுட்டாங்களோ ?

இந்த பன்னித் தொல்லை தாங்க முடியல ராமா.....

-------------------------------------------------------------------------------------------------------------------------------------

போன வாரம் உறவினரின் திருமணத்திற்க்காக முதல் நாள் இரவு மஹாலுக்கு செல்லும் வழியில் ஹைவே பேட்ரல் என்னை நிறுத்தினார்கள்.லைசென்ஸ் ,பைக் புக் இரண்டும் இல்லை என்னிடம்.அவர்கள் எடு என்று சொன்னதும் இல்லை என்று சொல்லிவிட்டேன்.ஊர் பேரு என்ன பண்றனு கேட்டதும் பெங்களூர்ல வேலை பாக்குறேன் கம்ப்யூட்டர் பொட்டி தட்டுறேனு சொன்னதும்.உன்மேல கேச போட்டு எங்க போய் தேடுறதுனு ஐயாவ போயி பாருனு இன்ஸ்கிட்டே அனுப்புனாங்க.இன்ஸ் சாருக்கும் அதே பதில சொல்லிட்டு கல்யாணத்துக்கா வண்டி எடுக்க வேண்டியாதாயிருச்சு இல்லேனா பைக்ல வந்திருக்கமாட்டேன் சார்னு சொன்னேன்.பக்கத்துல உள்ள ஏட்டு ஐயா எவ்ளோ வாங்கனு காத கடிச்சிட்டு இருக்கும் போதே போ தம்பினு இன்ஸ் பெரிய மனசோட அனுப்பி வச்சார்.நான் எப்போ செஞ்ச புண்ணியமோ முதல் நாள் நைட்டு அடிச்ச கிர்றாலே அன்னிக்கு உள்ள உபா ஏத்தல..

காசு வாங்கமா போலீஸ் விட்டுட்டாங்க அவ்ளோ நல்லவங்களாயிட்டாங்களா ?

அப்புறம் திரும்பவும் அன்னிக்கு மகாலுக்கு போய் சேரும் முன் வேறொரு இடத்துலயும் ஊத சொல்லிட்டு லைசென்ஸ் இல்லேனாலும் போக சொல்லிட்டாங்க..

ஒரு வேளை லைசென்ஸ் தேவை இல்லையோ இனி?

எது எப்படியோ எனக்கு பைசா மிச்சம்..
---------------------------------------------------------------------------------------------------------------------------------

ரெண்டு நாளைக்கு முந்தி வேலுபிரபாவின் காதல்கதை பார்த்தேன் .. சரியான தலைப்பு தேர்வு செய்திருக்கிறார்கள் படத்துக்கு.. அத்தனை காதல் கதைகள் அதும் வெரைட்டியான காதல கதைகள் , இளவயசு காதல்,நல்ல காதல், கலப்பு காதல்,காம காதல்,பெருசு காதல் ,கள்ள காதல்,பெருசு-சிருசு காதல் அத்தனை காதலும் ஒரே படத்தில்..

நல்லாத்தானே இருக்கு படத்துக்குள்ளே படம், என்ன கொஞ்சம் ஹாலிவுட் ரேஞ்சுக்கு யோசிச்சுபுட்டாப்புலய அதான் இங்கே ஓடலேனு நினைக்குறேன்..

---------------------------------------------------------------------------------------------------------------------------------

Wednesday, August 26, 2009

AND NOW!!!!!!!!!

ஏன்னு தெரியலை பத்து வருசத்துக்கு முந்தி மாதவனூர் ஊராட்சி
உங்களை வரவேற்குதுனு இருந்த பெருமையான ஒரு போர்ட மறைச்சு இப்போ யாதவர் பேரவை ,தேவேந்திரர் பேரவை,முக்குலத்தோர் பேரவை வரவேற்குதுனு ஊர் முழுக்க பல போர்டு சிருமையா..

ஏன் மக்கா இப்படி?


சந்தனமுல்லையின்
"And,Now"

ஆயில்யனின்
"And,Now"

நட்புடன் ஜமாலின்
"And,Now"

நிஜமா நல்லவனின்
"And,Now"

தமிழ் பிரியனின்
"And,Now"

முத்துலட்சுமியின்
"And,Now"

ஸ்ரீமதியின்
"And,Now"

நான் ஆதவனின்
"And,Now"

தமிழன் கறுப்பியின்
"And,Now"

சின்ன அம்மிணியின்
"And,Now"

பிராவகமின்
"And,Now"

கானா பிரபாவின்
"And,Now"

ஹரிணி அம்மாவின்
"And,Now"

அபி அப்பாவின்
"And,Now"

பிரியமுடன்......வசந்த்
"And,Now"

Friday, July 31, 2009

ஆஃப்பாயில்

நல்ல சரக்கு விக்கிற இடத்துல கள்ள சரக்கு இல்லாமல் இருக்குமா ? அப்படி நல்ல சரக்கு மத்தியில கொஞ்சம் கள்ள சரக்கு ..
ஃப்ரியாதான் குடுக்குறேன் உங்களுக்கு..

நம்ம சரக்கு
-----------------

சரக்கின் வாசத்தில்
போதமகனின் அழுகையில்
வாந்தியின் நாற்றத்தில்
குடிகாரன் ஆடலில்
எல்லோருக்கும்
போதை உண்டு
யாரேனும் என்னோட
வேட்டியை பார்த்தீர்களா?

------------------------------------
நம்ம சரக்கு
-----------------

சரக்கடிக்க
ஆசைப் பட்டேன்
சரக்கு
தீரும் வரை.

சரக்கு
தீர்ந்த பின்
மீண்டும் சரக்கு ஏத்த
ஆசை..

-------------------------------------
நம்ம சரக்கு
-----------------

காத்திருப்பேன் உனது வருகையில்
வந்துவிடு மொத்தமா நொடியில்
(வேறேண்ண ஆஃப்பாயில்தான்)

வாந்தி எடுக்கவா மொத்தத்தையும் ஏத்தி,
போதையா இருக்கும் கொஞ்சமா ஏத்து.

---------------------------------------
நம்ம சரக்கு
-----------------

போதை
ஏறியது
அது
வந்தது;
முதல் மது;
முதல் போதை.
இது இப்படித்தான்
போதை ஏறியது;
ஒவ்வொரு சொட்டும்
உள்ளூர உணர்த்தியது;
தவிர்த்திருக்கலாம்
தவறிவிட்டது
இல்லை தவறாமல்
வந்துவிட்டது.
அந்த மது
அப்படித்தானோ
தன் பிறவிபுத்தியை
காட்டிவிட்டது
வந்து விட்டது
இனி.........,
என்ன?
எப்படி?
எவ்வாறு?
தண்ணீர் ஊற்றி
வாயை விரக்தியுடன்
அலசிக்கொண்டேன்

-------------------------------------------
நம்ம சரக்கு
-----------------

3 ரூ. டீக்காக
கொடுத்த பத்து ரூபாயில்,
2 ரூபாய் சில்லறை
அவர் பாக்கெட்டுக்கு,
ஐந்து ரூபாயாவது
திருப்பித் தருவாரா?
டீ கடையில்
கத்தும் இதே மனதுதான்
காஃபி டேயில்
ஐம்பது ரூபாயையும்
சில்லறையாக
பாவிக்கப் பழகியிருக்கிறது

--------------------------------------------

டிஸ்கி:
-----------
இந்த கள்ள சரக்க ஏற்கனவே நீங்க நல்ல சரக்கு கிடைக்குமிடத்தில் பருகிருக்கலாம் , இருந்தாலும் மொத்தமா சரக்கு அடிப்பது சுகம்தானே அதான் .

Friday, July 24, 2009

கேக்ககூடாத கேள்விகள் பத்து .

எந்த இடத்துல எப்படில்லாம் கேள்வி கேக்க கூடாதோ அப்படி கேட்டால் வரும் பதில்கள்.அபியும் நானும்ல பிரகாஷ்ராஜ் மனோக்கு சொல்வாரே அது போல சில.

1.திரையரங்குகளில் நிக்கும் போது தெரிந்தவன் யாரச்சும் வந்தானா , அவன பாத்து என்ன மச்சி இங்க என்ன பண்ணீட்டு இருக்கே . படம் பாக்க வந்தியா ?

உனக்கு தெரியாதா , நான் இங்கதான் பிளாக்ல டிக்கெட் விக்கிறேன் உனக்கு வேணுமா ?

2.பேருந்துல போய்ட்டு இருக்கும்போது , ஒரு குண்டு அம்மா ஹீல்ஸ் அதும் குச்சியா இருக்குமே அப்படி ஒண்ண கால்ல போட்டுட்டு நம்ம கால்ல மிதிச்சுட்டு, சாரி வலிக்குதா ?

இல்ல இல்ல பரவால்ல , நான் மயக்கத்துல தான் இருக்கேன் வலிக்காது ஏன் இன்னொரு தடவை நீங்க டிரை பண்ணி பார்க்கலாமே.

3.சாவு வீட்ல கண்ணீர் பெருக்கெடுத்து அழுதுகிட்டே, ஏன் ஏன் இவ்ளோ பேர் இருக்கும்போது இவர மட்டும் ?

ஏண்டா நாரவாயா , அப்போ இவனுக்கு பதிலா நீ போறீயா ?

4.ரெஸ்டாரெண்ட்ல ஆர்டர் கொடுக்கும் போது சர்வர்ட்ட ,இங்க தோசை நல்லா இருக்குமா?
தோசை நல்லா ஸ்ட்ராங்காவும் டேஸ்டாவும் இருக்கும் சார் , கொஞ்சம் சிமெண்ட் போட்டு , அப்போ அப்போ அதுல துப்பி வச்ச மாவுல போட்டது சார்.

5.ஏதாச்சும் திருமணவிழாவுல பார்ர்குற தூரத்து மாமிக , ஏண்டா இவ்ளோ பெரியாளாயிட்டே அடையாளமே தெரியல ?
அதுலா சரி நீங்க என்னமோ சிறிசாயிட்ட மாதிரி பேசுறீங்க..

6.கல்யாண பத்திரிக்கை கொடுக்க வரும் பெண்ணிடம் , என்னடி மாப்ள நல்ல குணமா ?
மாப்பிள்ளை ரெண்டு கொலை , நாலு கற்பழிப்பு , பத்து கொளை பண்ணியிருக்காரம் . பயபுள்ள பயங்கரமா குடிக்குமா . நிறைய பெண்டுக சகவாசம் கூட உண்டாம்.எல்லாம் பணத்துக்காகதான் அவர கட்டிகிறேன்.

7.நைட் ரெண்டு மணிக்கு நல்லா தூங்கிட்டு இருக்கும் போது போன அடிச்சி , என்ன மச்சான் தூங்கிட்டு இருக்கியா ?

இல்ல மாப்ள , ஆப்ரிக்கால உள்ள ஜூலு மக்கள் கல்யாணம் பண்ணுவாங்களானு ஆராய்ச்சி பண்ணிட்டுருக்கேன்.நான் தூங்கிட்டு இருக்கேனு நினைச்சியா , ஏண்டா உனக்கு இப்டி புத்தி வேலை செய்யுது.

8.யாராச்சும் முடி வெட்டிட்டு வந்தா , என்னடா முடி வெட்டிருக்கே போல ?
இல்லடா இலையுதிர் காலம் போல இது முடியுதிர்காலம் அதான் முடி உதிந்திருச்சு.

9.புகை வண்டி விடுகையில் ,நீ ஸ்மோக் பண்ணிவியா ?

அய்யோ இல்லை இது சூழ்ச்சி . நான் சாக்பீஸதான் வாயிலே வச்சிருந்தேன் ,எப்படி புகை வருதுனு தான் தெரியல.

டிஸ்கி:
---------
யாராச்சும் பத்துனு சொல்லிட்டு ஒன்பதுதான் இருக்குனு கேட்டிங்கண்ணா , அந்த கேள்விதான் பத்தாவதுங்கோ

Friday, July 10, 2009

படித்ததில் பிடித்தது ..


கதை ?

இது ஒரு sudden fiction கதை வடிவம் -நெட்டில் படிக்க கிடைத்தது(சுஜாதா சொல்லியது ) -இதன் அர்த்தத்தை சொல்கிறவர்கள் மிகவும் புத்திசாலிகள்(நான் விடையை பார்த்துதான் புரிந்து கொண்டேன் ). இனி அந்த கதை :


ஒரு அப்பா, ஒரு அம்மா; ஒரே மகன் பைத்தியமாகி ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டிருக்கிறான். ஆஸ்பத்திரி வேறு ஊரில் இருக்கிறது.

பெற்றோர்களுக்கு ஒரு தினம் ஆஸ்பத்திரியிலிருந்து டெலிபோன் வருகிறது. பையன் நிலை கவலைக்கிடமாக இருப்பதாகவும் உடனே புறப்பட்டு வரும்படியும். உடனே என்றால் மறுதினம் தான் போக முடியும்; அதற்குள் என்ன நேர்ந்துவிடுமோ என்று கவலைக் கடலில் இரவெல்லாம் விழித்துக்கொண்டிருக்கிறார்கள். அப்போது:

டெலிபோன் மணி அடிக்கிறது. பதற்றத்துடன், பயத்துடன் அதை எடுக்கிறார் அப்பா.

"ஹென்றி இருக்கிறானா?" என்கிறது ஒரு பெண் குரல்.
"ஹென்றி என்று இங்கு ஒருவரும் இல்லை; தப்பு நம்பர்" என்று வைத்துவிடுகிறார்.

மறுபடியும் சில நிமிஷம் கழித்து டெலிபோன் அடிக்கிறது.
"ஹென்றி இருக்கிறானா?" அதே பெண்.
"மிஸ், உனக்கு என்ன நம்பர் வேண்டும்?"
"5365849"
"என் நம்பர் 5365840- ஒன்பதுக்கு பதில் சைபரைச் சுழற்றுகிறாய் போலிருக்கிறது"
"ரொம்ப தாங்க்ஸ்" என்று அந்த பெண் வைத்துவிடுகிறாள்.
சில நிமிஷம் கழித்து மீண்டும் டெலிபோன் மணி அடிக்கிறது.

----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

மொக்கை

அமெரிக்காவைக் கண்டுபிடித்தவர் யார்?

"அதை மறைத்து வைத்தவர் யார் என்று முதலில் நீர் சொல்லும்...'

மிகப் பெரிய கண்டம் எது?

"வாழ்வில் எத்தனையோ கண்டங்களைத் தாண்டி வந்து விட்டேன். அதில், இந்தப் பரீட்சை தான் மிகப் பெரிய கண்டம்...'

பருவ மழை பெய்வதற்கு நீர் கூறும் காரணங்கள்?

"நான் எந்தக் காரணமும் கூறத் தயாராக இல்லை...'

பிரான்சில் ஓடும் மிகப் பெரிய நதி எது?

"விசா வரட்டும்; போய் விசாரித்து வருகிறேன்...'

ஊசியிலைக் காடுகள் என்றால் என்ன?

"ஊசியிலைக் காடுகள் தான்!'

பூமத்திய ரேகை எங்கே ஓடுகிறது'

"அது எங்கேயும் ஓடவில்லை; ஒரே இடத்தில் தான் இருக்கிறது...'

Wednesday, July 1, 2009

நீங்க ரொம்ப நல்ல டாக்டருங்கோ..

எந்த பேப்பர படிச்சாலும் இல்லை பெருசுகள பாத்தாலும் காய்கறிய தின்னு , குடிக்காதே , உடற்பயிற்சி பண்ணுனு தாளிச்சிட்டு இருக்காங்க . நாமெல்லாம் 3 நாளுக்கு ஒரு தடவை கோழிய பார்க்கலேனா கோழி சண்டைக்கு வந்துரும் .அதனாலேயே கோழிக்கு 3 நாளுக்கு ஒரு ஹாய் சொல்லி வாய்ல போடுறது வழக்கம் .நானும் இந்த் கொசு(அதான் இந்த அறிவுரை) தொல்லை தாங்க முடியாம ஒரு பிரபல டாக்டரிடம் போய் கேட்டுட்டு வருவோம்னு போனதுல கிடைத்த தகவலை உங்ககிட்ட பகிர்ந்துக்கிறேன் ...

1.டாக்டர் தினமும் இருதய சம்பந்தமான உடற்பயிற்சி செஞ்சா , அதிக நாள் வாழலாமா உண்மையா ?

இருதயம் எவ்வளவு துடிக்கனுமோ அதுக்கு ஒரு அளவு இருக்கு ஒவ்வொரு உடம்புக்கு ஏத்த மாதிரி அது வேறுபடும் .உடற்பயிற்ச்சி செஞ்சு இருதய துடிப்ப அதிகமாக்குவதால் அதிக நாள் வாழ்கைய நீடிக்க முடியாது.நீங்கள் சொல்வது எப்படி இருக்குனா ரொம்ப வேகமா கார் ஓட்டுனா கார் அதிக நாள் நல்லா இருக்கும்னு சொல்ற மாதிரி இருக்கு . அதனாலே உடற்பயிற்சி செஞ்சு உங்க நேரத்தை வீணடிக்காதீங்க.

2.நான் அசைவத்தை குறைத்து காய் கனிகளை அதிகமா சாப்பிடனுமா ?

உங்களுக்கு ஒண்ணுமே தெரியாதா என்ன . கோழி,ஆடு,மாடு என்ன சாப்பிடுது? நெல்,பருப்பு,வைக்கோல் , புல்லு , புண்ணாக்கு,சோளம் .இதெல்லாம் காய்கறிகள் தானே ? அதனால ஆடு மாடு சாப்பிடும் காய்கறிகள் நம்ம உடலுக்குள் கோழி,ஆடு,மாடுகளை சாப்பிடும்போது இன்னும் பல சத்துக்களோடு நம் உடலுக்கு தானா வந்துரும்.

3.நான் மது குடிப்பதை குறைத்துக்கொள்ள வேண்டுமா ?
தேவையில்லை.மது அதில் இருந்து தயாரிக்கப்படுது? பழங்களில் இருந்துதானே.பீரும் மதுவும் தண்ணீர் எடுக்கப்பட்ட பழங்களில் இருந்து தயாரிக்கப்படுது.அதனாலே தண்ணீர் இல்லா பழம் உங்க உடலுக்கு போகுது. அதனால் நீங்க மது அருந்துவதை குறைக்க தேவையில்லை.

4.என்னுடைய உடம்பு/கொழுப்பு சதவீதத்தை எப்படி கணக்கீடுவது ?

அதாவது ஒரு உடம்பும் கொழுப்பும் உங்ககிட்ட இருந்தா ஒண்ணுக்கு ஓண்ணு. ரெண்டு உடம்பு ஒரு கொழுப்பு இருந்தா ரெண்டுக்கு ஓண்ணு இப்டிதான் ..

5.தினசரி உடற்பயிற்சியின் அவசியம் நண்மைகள் ?
இதை என்னால் ஏற்றுக்கொள்ளவே முடியாது. என்னோட தத்துவம் வலியில்லாமல் இருபபது மட்டுமே நல்லது.தினம் உடற்பயிற்ச்சி செய்து உடலை வருத்துவதில் எனக்கு உடன்பாடு இல்லை.

6.எண்ணை அதிகம் சேர்த்துக்கொள்ளலாமா சமைக்கும் போது ?

நான் சொல்வதை கேக்குறீங்களா என்ன ? எண்ணை எதில் இருந்து எடுக்கிறார்கள் எள்ளு அல்லது ஏதாவது பருப்பு காய்கறியில் இருந்து . உடம்புக்கு காய்கறி பருப்பு சேர்ப்பது தப்புனு எப்பவாது சொன்னேனா நான் ?

7.அதிகமா உக்காந்து எந்திரிக்கும் பயிற்ச்சி செஞ்சா என் வயிற்றுப்பகுதி சின்னதாக மாறுமா ?

கண்டிப்பா மாறாது. அதிகமா வேலை குடுக்கும் தசைகள் பெரிதாக வளரத்தான் செய்யுமே தவிர சிறிதாகாது.பெரிய வயிறு வேணும்னா இதை நீங்கள் செய்யலாம்.

8.நீந்துவதால் நல்ல உடல் அமைப்பு கிடைக்குமா ?
தெரில ஆனால் தினம் நீந்துகிற திமிங்கலம் ஏன் இப்படி இருக்குனு சொன்னீங்கனா பரவால்ல.

9.கட்டமைப்பான உடல் உருவம் தேவையா ?
நல்ல குண்டான வட்டமானதும் உருவம்தான் ..

10.சாக்லேட் சாப்பிடலமா டாக்டர் ?
நீ இவ்ளோ நேரம் காத இங்க போட்டியா இல்ல பக்கத்துல உள்ள் நர்ஸ்ட்ட காதல் அம்பு விட்டியா.. சாக்லேட் எதில் இருந்து வருது . அதுவும் (சொல்ல தேவையில்லேனு நினைக்கிறேன் உங்களுக்கு தெரியும் )


இவருட்ட பேசிட்டு வெளிய வந்ததும்தான் அப்பாடானு இருந்துச்சு.நாமெல்லாம் தண்ணீர் இல்லாமல் கூட இருப்போம் ஆனால் நல்ல தண்ணீர்(வேறென்ன பீர்தான்) இல்லாமல் இருக்க முடியுமா.நீங்க ரொம்ப நல்ல டாகடர்னு சொல்லிட்டு வந்தேன் .. இந்த டாக்டர் பத்தி நீங்க நினைக்கிறத் இங்க எழுதிட்டு போங்க மக்கா..

Tuesday, June 30, 2009

என்னவளுக்கு பிறந்தநாள்


நானும் இந்த உலகில் வாழ்வதற்கு ஆதாரமாய் இறைவன் படைத்த என் சரி பாதி ஆக போகும் என் கண்மணி சூரியாவுக்கு இன்று பிறந்த நாள் .என் இனியவளை உங்களுடன் சேர்த்து வாழ்த்துகிறேன் .


அளவில்லா அன்புடன்
தினேஷ்..

Monday, June 29, 2009

நாடோடிகள்

பசங்க படத்திற்க்கு பிறகு நல்ல படமா வந்திருக்குனு கேபிள் அண்ணன் , நாடோடி அண்ணன் (நாடோடி பற்றி நாடோடி.. ஆஹா) சொன்னாங்கனு நேற்று மதியம் கொஞ்சம் தாகசாந்தி அடைந்து தூக்கலா தூக்கத்த போட்ட என் அறை உடன்பிறப்புகளை உசுப்பி .. அவனுக கிட்ட நல்ல வார்தையில் திட்டு வாங்கி (என்ன நல்ல வார்த்தையில் திட்டானு நீங்க கேக்குறது கேக்குது) ..

பக்கத்துலேயே multiplex Pvr இருந்தாலும் 200 ரூ குடுத்து பார்க்க ரொம்ப யோசிக்க வேண்டி இருக்கே . அதனால புஷ்பாஞ்சலி தியேட்ட்ருக்கு போக முடிவெடுத்து 50 ரூ தான் டிக்கெட் ( மீதி 150 க்கு ஒரு நம்ம பிராண்ட் உற்சாக பானம் அருந்தலாம் பாருங்க அதான் 200 ரூ தியேட்டருக்கு போகாமா இப்படி .. நானெல்லாம் ஊர் திருவிழா அப்போ போடுற திரைப்படத்த விடிய விடிய தெருல உக்கார்ந்து பாக்குற ஆளு .. நமக்கு 50 ரூ டிக்கெட் கொடுத்து பாக்குறதே அதிகம் என்ன சொல்றீங்க ) ..

6 மணி படத்துக்கு அறையில் இருந்து 5.45 கிளம்பி 30 நிமிடம் பேருந்து பயணத்தில் உள்ள தியேட்டருக்கு போனோம் .ஹி ஹி நாமெல்லாம் என்னைக்கு நேரத்துக்கு போனோம் .பேருந்துல போகும்போது நான் கேபிள் அண்ணன் பதிவுல சொல்லியிருக்காரு , நாடோடி அண்ணன் சொல்லியிருக்காரு ,கார்த்திகை பாண்டி அண்ணன் சொல்லியிருக்காரு மற்றும் நம் பதிவர்கள் அனைவரும் சொல்லியிருக்காக படம் நல்லா இருக்குனு சொல்லிட்டு வந்தேன் . ஒருத்தன் மட்டும் எதையும் கேக்காம சிரிச்சிட்டே வந்தான் . என்னாடானு பார்த்தா பய சைக்கிள் கேப்புள படம் ஓட்டிட்டு இருக்கான் கண்கள் இரண்டால் உன் கண்கள்
இரண்டால்னு .. பார்த்துடா அறுத்துர (கழுத்ததான்) போராங்கனு சொன்ன பின்னாடிதான் பயபுள்ள சிரிப்ப நிப்பாட்டுச்சு ..

எல்லாரும் மிகுந்த எதிர்பார்புடன் தியேட்டர் வாசலுக்கு போனா , தியேட்டர்ல எதோ இடிச்சுட்டு கட்றாங்கனு மூடி கிடக்கு . அடங்கொய்யாலே இப்படி ஆயி போச்சுனு பக்கத்துல உள்ள தாக சாந்தி நிலையத்திலே சாந்தி அடைஞ்சிட்டு நாடோடி படம் பார்க்க போயி பாரோடி வந்தோம் ..

டிஸ்கி:
----
அடுத்த வாரம் பார்க்க பிளான் பண்ணியிருக்கோம் . பிளான் பண்ணமா பண்ணக்கூடாதுனு இப்பத்தான் உணர்ந்தேன் ...

நாடோடி படத்தை பத்தி எதிர்பார்த்து இங்க வந்து ஏமாந்த ஹி ஹி ஹி .. காத்திருக்கவும் .. இல்லேனா கேபிள் , நாடோடி அண்ணன தேடி போகவும் ..

Wednesday, June 17, 2009

புதிய தேர்வு விதிமுறைகள் - t20யின் தாக்கம்.

இந்த 20 - 20 கிரிக்கெட் ஃபீவர் வந்தாலும் வந்தாச்சு , நானும் எதாச்சும் போடானும்னு நினைச்சு ஒரு 120 MCய போட்டுட்டு மப்புள படுத்துக்கிட்டு உளருனது ..

1. தேர்வை ஒரு மணி நேரமாகவும் , 50 மதிப்பெண்களாவும் மாத்தனும்.

2. 30 நிமிடத்தில் ஒரு இடைவெளி விடனும் , அப்போ மாணக்கர்கள் உக்காந்து யோசிப்பாங்க ..

3. முதல் 10 நிமிடம் பவர் பிளே , தேர்வு கண்காணிப்பாளர் யாரும் அந்த நேரத்தில் தேர்வு அறையில் இருக்க கூடாது .
(உடனே எல்லோருக்கும் இதை கண்டிப்பா நடைமுறை படுத்தனும்னு தோணுமே!!!)

4. ஃப்ரீ ஹிட் - மாணக்கர்களே எதேனும் ஒரு கேள்வியும் பதிலும் எழுதி கொள்ளலாம்.

5. அப்புறம் தேர்வில் தப்பான கேள்வி வந்தால் என்னவேனா பதில் எழுதலாம் .(ஃப்ரீ ஹிட்) மார்க் உண்டு கண்டிப்பா . ஆனா ஒன்னும் எழுதாமா வெரும் பேப்பர் மட்டும் இருந்தா முட்டை மட்டும் தான்.

6.உற்சாக அழகிகள் தேர்வு அறையில் மாணக்கர்கள் எழுதும் ஒவ்வொரு சரியான பதிலுக்கும் இடுப்ப நல்லா ஆட்டி உற்சாக படுத்தனும் .
(இப்படி இருந்தா கண்டிப்பா தேர்ச்சி சதவீதம் கூடும் என்ன சொல்றிங்க ?)


Wednesday, June 3, 2009

திருமணம் - ஒரு சிறப்பு பார்வை


திருமணம் செய்து கொள்வது , ரெஸ்டாரண்டுக்கு நண்பர்களுடன் போவது போல தான்.நாம் நமக்கு பிடித்ததை கேட்டு வாங்கிகொண்டாலும் , மத்தவன் வாங்கினத பார்த்து நாமும் அத வாங்கியிருக்கனும் என்று எண்ணத்தோனும்.

திருமணத்திற்கு முன் ஒரு ஆண் பாதி வாழ்கை தான் வாழுகிறான் திருமணத்திற்கு பின் அவன் வாழ்க்கையே முடிந்தது.

திருமணம் ஒரு கல்வி நிலையம்,ஆண் தன் பேச்சிளர் பட்டத்தை இழக்கிறான் , பெண் மாஸ்டர் பட்டம் பெறுகிறாள்.

ஒரு மகன் தன் தந்தையிடம் ,கல்யாணம் பண்ண எவ்வளவு செலவாகும் , தந்தை ”தெரியலயேப்பா , நான் இன்னும் அதற்கு தான் பணம் செலவு பண்ணிக்கிட்டு இருக்கேன்”.

திருமணமான முதல் வருடம் கணவன் பேசிட்டே இருப்பான் , மனைவி கேட்பாள்,இரண்டாம் வருடம் மனைவி பேச கணவன் கேபட்பான்,மூன்றாம் வருடம் இருவரும் பேச பக்கத்து வீட்டுக்காரன் கேட்ப்பான்.

மனைவி இன்னொரு பெண்ணுடன் , “ நான் வந்த பின்புதான் இவர் இலட்சாதிபதி ஆனார் “ அதற்கு முன்னாடி “அவர் கோடீஸ்வரனா இருந்தார்”

Tuesday, June 2, 2009

cofeeday - வயிற்றெரிச்சல்

ஞாயிற்றுக்கிழமை நானும் என் நண்பர்கள் இருவரும் வழக்கமாக சமையல் பொருட்கள் வாங்க டோட்டல்க்கு போனோம்.என் கூட வந்தவன் கையிலே கொஞ்சம் உணவு கூப்பன் வைத்திருந்தான்,அது பாக்கெட்ல கனமா இருந்துச்சு போல,மேலும் ரெண்டு மூணு பிகருக வேற அங்க இருந்துச்சு .என்னைக்கும் இல்லாத திருநாளா , வா மச்சான் cofeeday போய் ஒரு cofee குடிக்கலாம்னு சொன்னான்.சரி நம்ம காச , ஒசில கிடைச்சா எதுனாலும் சாப்பிட ரெடினு சொல்ற கூட்டம்ல நாம. வா மச்சான் போவம்னு போய் உக்காந்தாச்சு..

போய் உக்காந்து அஞ்சு நிமிசமாச்சு ஒரு பய பக்கத்துல வரல , உடனே நம்ம கூட வந்தவரு புரோட்ட 
கடையிலே கூப்பிடுற பழக்க தோசத்துல பாசு இங்க வாங்க அப்படினு ஒரு சவுண்ட விட்டாரு பாருங்க , பக்கத்துல உக்காந்த அத்தனை பேரும் ஒரு அபவ்டன் போட்டு மொத்தமா பார்வையிலேயே மொக்கி எடுத்தானுக.பயபுள்ளக அப்பவும் என்ன வேணும் கேட்டு ஒருத்தனும் வரல .

 சரிடானு சொல்லிட்டு எதோ மேசையிலே ஒரு அட்டை இருந்துச்சு , அதான் மெனு காடா இருக்கும்னு புரட்டி புரட்டி பார்ததா மொத்தமே ஒரு மூணு வெரைட்டி காஃபி போட்டிருந்துச்சு பேரு ஒண்ணும் விளங்கல , சரி எது கம்மி விலையில இருக்குனு பாத்து இத சொல்வம்டானு பக்கத்துல் உள்ளவண்ட சொன்னா ரெண்டு பேரும் ஆளுக்கு ஒரு பக்கம் திரும்பி அந்த வழியா போற வர்ற புள்ளைகலெல்லாம் சைட் அடிச்சுக்கிட்டு இருக்காங்கே. அடங்கொய்யால ஏண்ட என்கிட்ட சொல்லலேனு ஒரு சண்டைய போட்டுட்டு , நானும் அதில் ஐக்கிமாயிட்டேன் .அப்பவும் ஒருத்தனும் வந்து என்ன வேணும்னு கேக்கல , ஒரு வேளை இதுக்குதான் cofee dayகு பிகருகல கூட்டிட்டு வர்றாங்கலோ ஒருத்தனும் தொந்தரவு பண்ணமாட்டானு.

கடைசியா வந்து மெனு கார்டு கொடுத்தான். அப்பா முதல்ல பார்த்தது (?) இதிலே நிறைய அயிட்டம் 
இருந்துச்சு (நம்ம அயிட்டம் விஸ்கி பிராண்டி இல்லப்பா).சரி இதிலே பாப்போம்னு தேடுனா நம்ம 
அயிட்டம்(அதான்பா விஸ்கி) கலந்து ஒரு காஃபி , உடனே மூணு பேருக்கும் அத சொல்லி கொண்டு வாங்கனு சொல்லிட்டோம்ல.பேரெல்லாம் தெரில.கொண்டு வரேன்னு சொல்லிட்டு போனவன் அதுக்கப்புறம் ஆள காணோம் .சரினு திரும்பவும் ஜோதில(ஃபிகருகல நோட்டம் விடுறதுதான்) கலந்தாச்சு.

ஒரு பத்து நிமிடம் கழிச்சு கொண்டு வந்து வச்சான்.காஃபி ஒரு டம்ளர்லயும்,ஒரு பாக்கெட்டும் , என்னடானு பாத்த சீனி.அடப்பாவி 60 ரு காஃபி வாங்கினா சீனி கலந்து கொடுக்க மாட்டிங்களாயா நாங்கதான் கலக்கனுமானு பக்கதுல உள்ளவன் கேட்டான்.சீனிய கலக்கி வாயில காஃபிய வச்சா சுடுதண்ணி மாதிரி அப்படியே இருக்கு , ஒரு பாக்கட் சீனி போட்டும் இனிப்பே இல்ல .சீனிய அந்த கலக்கு கலக்கினதுல இனிப்பு சேந்துச்சோ சேரலியோ ஆனா காஃபி உள்ள போனதும் எனக்குள் கலக்க ஆரம்பிச்சுருச்சு. மூனு பேரும் ஒருத்தருக்கொருத்தர் பாத்து சிரிச்சுகிட்டே சூப்பரா இருக்குடானு சொல்லிக்கிட்டோம்.கஷ்டப்பட்டு சுடு தண்ணிய சாரி காஃபிய குடிச்சுட்டு கொய்யாலே இனி வாழ்வுக்கும் cofee day பக்கமே போககூடாதுனு ஒரு கும்பிட போட்டு வந்தேன்..

டிஸ்கி:
----
      200 ரூபாய்கு 3 காபி வாங்கி சாப்பிட்ட நாங்க , வீட்டிற்கு பக்கத்தில் உள்ள 3 ரூ டீ நல்லாவே 
இல்லேனு கடைக்காரன்கிட்ட சண்டை போடுற ஆளுக .

Friday, May 29, 2009

Pug சொல்பவை ...




ஹும்ம்.... இவன் இன்னைக்குள்ள முடிக்கமாட்டான்,சும்மா பார்க்க வச்சுட்டானே. எவ்ளோ நேரம்தான் பாக்குறது!!!!!


டேய்.... கொஞ்சம் மெதுவா நடடா..... லூசு பயலே....


இதை யாரு உங்க அப்பனா எடுத்துட்டு வருவான் ???


அய்யோ.... அப்படியே கொள்ளைகாரன் மாதிரியே இருக்க டா....


தினம் குளினு சொன்னா கேக்குறியா? ஒரே கப்பு தாங்க முடியல...


நீ சைலண்டா நில்லு எல்லாத்தையும் நான் பாத்துக்கிறேன்


ஒழுங்கா கட்டுடா கொய்யால ..


என்னம்மா வீட்ல சொல்லிட்டு வந்தியா ?


இந்த வெத்து வேட்டு சீனுக்கு ஒண்ணும் குறைச்சல் இல்ல..


சீக்கிரமா முடிமா ..... தண்ணி அடிக்கணும்ல



தேடு, தேடு நல்லா தேடு......
  


இதெல்லாம் அவங்ககிட்ட சொல்லிடாதிங்கப்பா ..