Monday, March 23, 2009

புரட்சிக்கு ‘சே’குவேராவும் பொறுக்கி தின்ன ‘ஜெ’யலலிதாவும் !


நாங்க சேகுவேராவைச் சொன்னாலும்
ஜெயலலிதா பின்னால் நின்னாலும்
இலக்கு ஒண்ணுதான் தோழர்.

முதலாளித்துவப் போதையில்
மூழ்கிக் கிடக்கும் மக்களை
அந்தப் பாதையிலேயே போய்தான்
அப்படியே புடிக்கணும் !

தோழர் …. மக்கள் இன்னும் தயாராய் இல்லை
அப்புறம் பாருங்க….. நேரா புரட்சிதான் !

அது வரைக்கும் ?

போயசு தோட்டம்தான் !

கேட்டவர் அதிர்ச்சியடைய
‘டோட்டலாய்’ விளக்கினார் தோழர் :

யாருடைய காலில் விழுந்தாலும் - சி.பி.எம்.
தன் கொள்கையை மட்டும் இழக்காது.

மக்கள் விரோதிகள் எவரும் இனி
மார்க்சிஸ்டுகளை விலக்கி விட்டு
அரசியல் நடத்த முடியாது !

அந்தப் புரட்சித் தலைவியே தடுத்தாலும்
‘அம்மா’ சபதம் முடிக்காமல் ‘பொலிட்பீரோ’ அடங்காது.

அப்புறம் எப்போது புரட்சி?

அது இருக்கட்டும் தோழரே,
சி.பி.எம். வரலாற்று ஸ்டேட்டஜியே வேற:

அன்று நேருவை அடையாளம் கண்டோம்
அவரிடம் சோசலிச வாடையை வளர்த்தோம்.

காங்கிரசுக்கு உள்ளே இருந்தே
முற்போக்கு சக்திகளை மோப்பம் பிடித்தோம்.
அப்படியே படிப்படியாய்
தனிக்கடையை விரிச்சோம்.

அப்புறமா … கேரளா, திரிபுரா, மேற்கு வங்கம்னு
ஆட்சியைப் பிடிச்சோம்.

அடுத்தது புரட்சி ?

பின்னே ஆயுதம், வன்முறை இல்லாமல்
அனைவருமே சமமாகி சோசலிசம் படைக்க
நம்ம நம்பூதிரிபாடு ஆட்சியிலதான்
நாட்டிலேயே முதன்முதலா
லாட்டரி சீட்டு அடிச்சோம் !

அல்லாவை வென்றெடுத்து
மத நல்லிணக்கம் நிலைநாட்ட
முசுலீம் லீக் கூட்டணி முடிச்சோம்

இந்துக்களிடமும் வர்க்கத்தீயை மூட்டிவிட
சபரிமலையில் மகரஜோதி பிடிச்சோம் !

காசு சேர்த்து நிலத்தை வாங்கி
பண்ணையார்கள் ஆதிக்கம் ஒழிச்சோம்

போர்க்குணத்துடன் போலீசை பயிற்றுவித்து
போய்…. நக்சல்பாரிகளைக் கடிச்சோம் …

இப்படி …. கச்சிதமா கம்யூனிசத்தை முடிச்சோம் !

சரி புரட்சி எப்போது ?

அட ! டாடாவையே வென்றெடுத்தோம்
நந்திகிராமத்தில் நம்ம கட்டுப்பாட்டில் நுழைச்சோம் !

பாட்டாளிவர்க்க ஒற்றுமையைக் காக்க
விவசாயிகள் மண்டையை உடைச்சோம்.

பெண்களென்னும் பேதம் பார்க்காமல்
புடவையை பிடித்து கிழிச்சோம்.

வர்க்கப் பகைமையை ஒழிக்கத்தான்
சிங்கூர் நந்திகிராமில்
விவசாயி, தொழிலாளி வர்க்கத்தையே ஒழிச்சோம் !

இதுவா புரட்சி !

இது மட்டுமா ! சாதி ஆதிக்கத்தை ஒழிக்க
உத்தபுரம் சுவரை நாங்கதான் இடிச்சோம்.
சிறுதாவூர் தலித் நில பிரச்சனைக்கும்
நாங்கதான் கொடி பிடிச்சோம்
இப்ப, செயல்தந்திர அரசியல்படி
அம்மா தோட்டத்திலேயே அந்தப் பிரச்சனையை புதைச்சோம்.

போர் என்றால் நாலுபேர்
சாகத்தான் செய்வார்கள் என்று
இழவெடுத்த புரட்சித்தலைவி - இப்போது
போர்நிறுத்தம் வேண்டுமென்று
உண்ணாவிரதம் இருந்தது கண்டு
உண்டியலுக்கு வெளியே காணிக்கையாய் கிடந்தோம் !

”ஊரை அடித்து உலையில் போட்ட பானையோ ! - இன்னும்
யாரை மிதிக்கக் காத்திருக்கும் யானையோ” என்று

அம்பிகையைப் பார்த்தவுடன் அந்தக்கால நினைவு வந்தபோதும்,
பாதம் பணிந்த ஓ. பன்னீரும், பஜனை குழுவோரும்
பசியெடுத்த அம்மாவின் பக்கத்தில் நில்லாமல்
ஒரு காதம் விலகி வேண்டி நின்ற போதும்.

ஈழத்தமிழருக்காய் ஈரம் கசிந்து
ஓதம் காத்த அந்தச் சுவரோரம்
அஞ்சாமல் ஒதுங்கிய எங்கள் போர்த்தந்திரம் சும்மாவா ?

இதிலென்ன புரட்சி ?

சமரச சுத்த சன்மார்க்க சபை கலைந்து - எங்கள்
சமரச சித்தாந்த சன்னதியின் தீக்கதிரில் நாக்குழறி
எச்சு ஊறி எங்கள் எச்சூரி பின்னால் திரளுகையில்
என்ன ஒரு கேள்வி இது !
எத்தனை முறைதான் ஓதுவது !

சவுக்கடியும், சாணிப்பாலும் கொடுத்து
கீழத்தஞ்சையில் கம்யூனிஸ்டு கட்சியை
ஒழிக்கப் பார்த்தான் காங்கிரசு ! கடைசியில் என்னாச்சு ?
நம்ம துணையில்லாமல்
அவனால் நாடாள முடிந்ததா ?

நள்ளிரவில் எழுப்பி விட்டு
நம் அரசு ஊழியர் வர்க்கத்தை
சிறையில் தள்ளினாளே ஜெயலலிதா
இப்போது என்ன ஆச்சு ?

வலது, இடதாக தா. பாண்டியனையும், வரதராசனையும்
ஜெயலலிதா வளைத்துப் பிடிப்பதைப் பார்த்து
தோட்டத்து சசிகலாவே வாட்டத்தில் பொருமுகிறாள்.

நாம இல்லாமல்
யாராவது இனி அரசியல் நடத்த முடியுமா ?

போதும் … எப்போதுதான் புரட்சி ?

வந்தது கோபம் தோழருக்கு :

அட ! என்னங்க
இவ்வளவு தூரம் விவரம் சொல்கிறேன்
இன்னும் விளங்காமல்
எங்களிடம் வந்து புரட்சி, புரட்சின்னா…. ?
சுத்த புரியாத ஆளா நீங்கள் !?

நன்றி துரை. சண்முகம்!

Friday, March 20, 2009

லொள்ளுவதெல்லம் லொள்ளல்ல

வடிவேலு: ம்மா..ம்மா.
சத்யராஜ்: அட.என்னடா மாப்ள சின்னாபின்னமான சிங்கள சிப்பாய் மாதிரி வர. என்னாச்சி.
வடிவேலு: அத ஏனப்பா கேக்கற. நாம்பாட்டுக்கு போய்க்கிருந்தனா. இந்த விஜய் தம்பி இல்ல விஜய் தம்பி. அந்தாளு எதிர்ல வந்திச்சி. அந்தாளும் உன்ன மாதிரி வில்லங்கமான ஆளாச்சா. எதுக்கு வம்புன்னு பணிவா வளைஞ்சி ஒரு கும்பிடு போட்டனப்பா. எதுக்குன்னே தெரியலப்பா. எண்டா நாயே அவனவன் மெயிலுல ப்ளாகுல வெறுப்பேத்துரது போறாதுன்னு என்னை பார்த்ததும் வில்லா வளைஞ்சி கும்பிடு போடுற மாதிரி கடுப்பேத்துரியான்னு பின்னி பெடலெடுதிடிச்சி.

பார்த்திபன்:ஏண்டா நாயே! ராத்திரியெல்லாம் ஓட்டு மேல ஏறி உக்கந்திருக்கியாமே? உன் சம்சாரம் சொல்லிச்சி

வடிவேலு:அட போப்பா. பக்கத்து வீட்டுக்காரன் சொல்லிட்டிருக்கான் பொண்டாட்டிகிட்ட. கேப்டன் ஓட்ட பிரிச்சிருவாருன்னு. ஏற்கனவே அந்தாளுக்கும் நமக்கும் சரி வரல. அதான் உசாரா இருக்கறது. இப்போ புரியுதா?

வடிவேலு: சிம்ரன்! டெலக்ஸ் பாண்டியன்னா ஊர்ல எல்லா பயத்துக்கும் அவ்ளோ பயம் தெரியுமா?
சரளா: அட தூ. நேத்து பொறந்ததெல்லாம் எஸ்.எம்.எஸ்., இமெயில்னு திரியுதுக. பேர பாரு டெலக்ஸ் பாண்டியன். இதுக்கு பந்தா வேற.

வ‌டிவேலு:ஏந்த‌ம்பி. நீஜிலாந்து மேச்சில‌ 100 ஓட்ட‌த்துக்கு மேல‌ ஜெயிச்சிட்டம் பார்த்தியா?
பார்த்திப‌ன்:நீ எப்போடா நியூசிலாண்ட் போன‌?
வ‌டிவேலு:நான் அங்க‌ போன‌ன்னு சொன்ன‌னா? டி.வில‌ பார்த்த‌ன‌ப்பா.
பார்த்திப‌ன்:எங்க‌ காட்டுடா பார்க‌லாம்.
வ‌டிவேலு:(ஆஹா. ஆர‌ம்பிச்சிட்டான். ந‌ம்ம‌ள‌ காவு வாங்காம போமாட்டா‌ன் போல‌யே) நின‌ச்ச‌ப்ப காட்டுன்னா எப்ப‌டிப்பா. மேட்ச் ந‌ட‌க்க‌ற‌ப்போ தான‌ காட்டமுடியும். ‌
பார்த்திப‌ன்:மேட்ச் 'ந‌ட‌ந்துச்சின்னா' அப்புற‌ம் ஏண்டா ஓட்ட‌ம்னு சொல்ற‌ வெண்ண‌.
வ‌டிவேலு:அட‌ மேட்ச் ஓட்ற‌தில்ல‌ப்பா. ஆடுற‌வ‌ங்க‌ தான் ஓடுற‌து.
பார்த்திப‌ன்:ஆடுற‌வ‌ங்க‌ ஓடிட்டா அப்புற‌ம் எப்பிடிடா ஜெயிச்சாங்க‌?
வடிவேலு:விடுய்யா. விடுய்யா. இனிமே நான் மேட்சே பார்க்க‌ல‌ போருமா?

பார்த்திப‌ன்:ஏண்டா? வ‌ட‌ இந்தியால‌ போய் தேர்த‌ல்ல‌ நிக்க‌ போறியாமே? என்னா மேட்டரு?
வ‌டிவேலு:அதுவா? அது ஓபாமா டெக்கினிக்கு.
பார்த்திப‌ன்:அதென்னாடா டெக்கினிக்கு.
வ‌டிவேலு:அது வ‌ந்து த‌ம்பி உள்ளூர்ல‌ எல்லாரும் ந‌ம்ம‌ள‌ மாதிரியே இருக்காங்க‌ளா. ம‌க்க‌ளுக்கு அடையாள‌ம் தெரிய‌ற‌தில்ல‌. பூரா ப‌ய‌லும் வெள்ள‌யா இருக்கைல‌ ஓபாமா ந‌ம்ம‌ க‌ல‌ர்ல‌ இருந்த‌தால‌ தான‌ ப‌ளிச்சுன்னு எல்லாருக்கும் தெரிஞ்சு குத்தொ குத்துன்னு குத்தினாங்க‌. அதாம்பா நாம‌ளும் அப்டியேஏஏஎ பாலோ ப‌ண்றோம்.

வ‌டிவேலு:ஏந்த‌ம்பி. இந்த‌ அரி ப‌ட்ட‌ர் எங்க‌ இருக்காப்ப‌ல‌.
பார்த்திப‌ன்:பெருமாள் கோவில்ல‌ போய் கேளுடா எரும‌.
வ‌டிவேலு:அட நீ வேற‌ப்பா. நான் சொல்ற‌ அரி ப‌ட்டரு. சின்ன‌ பைய‌ன். க‌ண்ணாடி போட்டுகிட்டு ஒட்ற‌குச்சில‌ உக்காந்து ஏரோப்ளேன் மாதிரி சும்மா ரொய்ய்ங்னு போவுமே. அந்த‌ ப‌ட்ட‌ரு.
பார்த்திப‌ன்:அது ஹாரி பாட்ட‌ர்டா முண்ட‌ம். அந்தாளு எதுக்கு இப்போ?
வ‌டிவேலு:அதில்ல‌ப்பா. அமெரிக்கால‌ ரெண்டே க‌ச்சி தானாம்ல‌. அதான் இப்பிடி ஒரு பேம‌சான‌ ஆள‌ புடிச்சி த‌லைவ‌ராக்கி அ.மு.க‌.னு ஒரு க‌ட்சிய‌ ஆர‌ம்பிச்சா என்னான்ன்னு ஒரு ஐடியா.

பார்த்திப‌ன்:டேய். நிறுத்து. ஏன்டா அப்பாவிய‌ போட்டு இந்த‌ அடி அடிக்கிற?
வ‌டிவேலு: இவ‌னா? இவ‌னா அப்பாவி? இவ‌ன‌ அப்டியேஏஏஏ சேத்து வெச்சி அறுக்க‌ணும். என்னா பேச்சு பேசிட்டான். ராஸ்க‌ல்.
பார்த்திப‌ன்:அப்பிடி என்னாய்யா சொல்லிட்டான்.
வ‌டிவேலு: என்னா சொன்னானா? சூப்ப‌ர் ஸ்டாரு யாருன்னா ர‌ஜினி இல்ல‌ கேப்ட‌ன்னு சொல்றான். ஏண்டான்னா ர‌ஜினி யார் ப‌க்க‌ம்னு யாருமே கண்டுக்கலையாம் . கேப்ட‌ன‌ தான் அம்மாவும் அய்யாவும் கூட்ட‌ணிக்கு வா கூட்டணிக்கு வான்னு கூப்டுறாங்க‌ளாம். என்னா கொழுப்பு!

Wednesday, March 11, 2009

ராகிங் கொடுமைக்கு மேலும் ஒரு மாணவன் பலி


கல்லூரிகளில் அதிகரித்து வரும் ராகிங் கொடுமைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க உச்சநீதிமன்றமே தலையிட்டு பல்வேறு நடவடிக்கைகளை எடுக்கப்பட்டு வரும் போதிலும் இந்த இழிச்செயல் இன்னும் முடிவுக்கு வருவதற்கான அறிகுறிகள் தென்படாமலேயே இருக்கிறது.

சமீபத்தில் ராகிங் கொடுமைக்கு மருத்துவக் கல்லூரி மாணவன் ஒருவன் பலியாகியிருப்பது இந்த சந்தேகத்திற்கு வலு சேர்ப்பதாகவே அமைந்திருக்கிறது.

புதுடெல்லியை சேர்ந்தவன் அமான் கச்ரூ என்ற 19 வயது மாணவன். இவன் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் இமாச்சல பிரதேசத்தில் உள்ள தண்டா என்ற இடத்தில் உள்ள டாக்டர் ராஜேந்திர பிரசாத் மருத்துவக் கல்லூரியில் மருத்துவப் படிப்பில் சேர்ந்தான்.

மருத்துவராக மக்களுக்கு சேவை செய்வதுடன் வாழ்க்கையிலும் முன்னேற வேண்டும் என்ற கனவுகளுடன் கல்லூரிக்கு சென்ற கச்ரூவுக்கு மூத்த மாணவர்களிடம் இருந்து ராகிங் என்ற பெயரிலான துன்புறுத்தல்கள்தான் வரவேற்பாக அமைந்திருந்தன.

மூன்றாம் ஆண்டு பயிலும் மாணவர்கள், குடித்துவிட்டு, குடிபோதையில் கச்ரூவை பல்வேறு வகைகளில் துன்புறுத்தியுள்ளனர். இந்தத் துன்புறுத்தல்கள் பற்றி தன் பெற்றோரிடம் பலமுறை கூறி கதறியுள்ளான் கச்ரூ.

இந்த நிலையில்தான் கடந்த வெள்ளிக்கிழமை நள்ளிரவு நேரத்தில் கச்ரூ மூன்றாம் ஆண்டு மாணவர்களால் சகட்டுமேனிக்கு அடித்து தாக்கப்பட்டுள்ளான். அடி தாங்காமல் பயங்கிய கச்ரூ உயிர் பிரிந்துவிட்டது.

``அமான் கச்ரூ எங்களிடம் ராகிங் கொடுமை பற்றி கூறிக் கொண்டிருந்தான். ஆனால் அது இந்த விபரீதத்தில் போய் முடியும் என்று நாங்கள் கனவிலும் நினைக்கவில்லை. முதலாம் ஆண்டு பயிலும் மாணவர்கள் இதுபற்றி கல்லூரி நிர்வாகத்திடம் பலமுறை புகார் செய்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. நாங்கள் எங்கள் வீட்டுப் பையனை இழந்துவிட்டோம். மற்ற மாணவர்கள் பாதுகாக்கப்பட வேண்டும் என்றால் இப்போதேனும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்'' என்கிறார் அமானின் உறவினரான இந்திரா தர்.

அமானின் தந்தை டான்சானியாவில் உள்ள பல்கலைக்கழகம் ஒன்றில் விஜயம் செய்யும் பேராசிரியாக பணியாற்றி வருகிறார்.

இந்த சம்பவத்தை தொடர்ந்து இரண்டு மாணவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கல்லூரி விடுதியின் நிர்வாகி பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளார். கல்லூரியின் முதல்வர் பதவி விலகியுள்ளார்.

மாணவர்களிடையே ஒரு நெருக்கத்தை ஏற்படுத்துவதற்காக விளையாட்டாகத் தான் ராகிங் செய்யப்படுகிறது என்ற வாதம் இருந்து வருகிறது. ஆனால் அது இதுபோன்ற விபரீத முடிவுகளை அடிக்கடி ஏற்படுத்தி வருகிறது. உடனடியாக இதற்கு முற்றுப்புள்ளி வைக்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

Tuesday, March 10, 2009

ஒரு அழகான கிராமம்

ஒரு அழகான கிராமம்.அந்தக் கிராமத்தின் தலைவருக்கு ஒரு பெண் இருந்தாள்.அவளைப் போல் ஒரு அழகிய பெண்னை யாரும் பார்த்ததும் இல்லை கேட்டதும் இல்லை.அந்தப் பெண் பக்கத்து கிராமத்தைச் சேர்ந்த ஒரு சாதாரண வாலிபனைக் காதலிக்க ஆரம்பித்து விட்டாள். 
இது தெரிந்ததும் மொத்த கிராமமும் அந்தக் காதலை எதிர்க்க ஆரம்பித்தது.இதனால் வேறு வழி தெரியாத காதல் ஜோடி ஊரை விட்டு ஒட தீர்மானித்து ஒரு நாள் யாருக்கும் தெரியாமல் காணாமலும் போய்விட்டனர். உடனே ஊரே சேர்ந்து காதல் ஜோடியைத் தேடியது. இருந்தும் அவர்களால் கண்டு பிடிக்கவே முடியவில்லை. 

அதன் பிறகு அவர்கள் அந்த்க் காதலை ஏற்றுக் கொள்ள முடிவு செய்து செய்தித்தாளில் விளம்பரமும் கொடுத்தனர்.அதைப் பார்த்த காதல் ஜோடி உடனே ஊர் திரும்பியது. சந்தோஷப் பட்ட ஊர் மக்கள் அந்தக் காதல் ஜோடிக்கு பிரமாண்டமான முறையில் திருமணம் செய்ய முடிவு செய்தனர். 

திருமணத்திற்குத் தேவையான பொருட்களை வாங்க நகரத்திற்குச் சென்றிருந்தனர்.அப்போது எதிர்பாராதவிதமாக ஒரு லாரி மோதி அந்த வாலிபன் அந்தப் பெண் எதிரிலேயே உயிர் துறந்தான். உடனே அந்தப் பெண்னும் மனநிலை பாதிக்கப்பட்டாள்.

ரொம்ப நாட்களுக்குப் பிறகு நினைவு திரும்பிய அந்தப் பெண் குடும்பத்தினருடன் வசித்து வந்தாள். திடீரென்று ஒரு நாள் அப்பெண்னின் தாய் ஒரு கனவு கண்டாள்.
அதில் ஒரு தேவதை தோன்றி அவள் மகள் அவளுடைய காதலன் நினைவாக வைத்திருக்கும் உடையில் இருக்கும் இரத்த்க் கறையை உடனே துவைக்க வேண்டும் என்றது,இல்லா விட்டால் மோசமான விளைவுகள் ஏற்படும் என்றும் எச்சரிக்கை செய்தது. 

அவள் தாய் கனவை மதிக்கவில்லை. அடுத்த நாள் அதே
தேவதை அந்தப் பெண்னின் தந்தையிடமும் கனவில் எச்சரித்தது.ஆனால் அவரும் அதைக் கண்டு கொள்ளவில்லை

அடுத்த நாள் அப்பெண்னின் கனவிலேயே தோன்றி எச்சரித்தது.அவள் உடனே தாயிடம் கனவைப் பற்றிக் கூறினாள். அதன் பிறகே அதன் முக்கியத்துவம் உணரப்பட்டது.அவள் தாய் அதை துவைக்கக் கூறினாள். உடனே அந்தப் பெண்னும் அதைத் துவைத்தாள். இருந்தும் தேவதை மறுபடியும் அடுத்த நாள் கனவில் வந்து கறை சரியாகப் போகவில்லை என்று எச்சரித்தது.. மறுபடியும் அப்பெண் அத்துணியைத் துவைத்தாள்.இருந்தும் கறை போகவில்லை.

அடுத்த நாள் காலையில் அழைப்புமணி ஒலிக்கவே அந்தப் பெண் கதவைத் திறந்தாள்.அப்போது கனவில் வரும் அதே பெண் நின்று கொண்டிருந்தாள். அவள் முகம் கனவில் வருவதைப் போல் கனிவாக இல்லாமல் வெளிறிப் போய் இருந்தது.உடனே இவள் பயத்தினால் அலறினாள். 

அந்தத் தேவதை கோபத்துடன் கூறியது,"லூசாடி நீ!,ஸர்ப் எக்ஸல் போடு கறை போயிடும்" என்றது. 

ஹய்யோ ஹய்யோ இதையும் பொறுமையா படிச்சிங்களே ! நீங்க ரொம்ப நல்லவங்கோ !

இன்றைய அரசியல் கோமாளி

மக்களவைத் தேர்தல் அறிவிப்பு வந்ததால் தான் தா.பாண்டியன் பக்க மேளம் வாசிக்க, நல்லகண்ணுக்கள் நால்வகைப் படையுடன் உடன்வர, இலங்கை பிரச்சனைக்காக ஜெயலலிதா உண்ணாவிரதம் இருக்கிறார். தெருவெங்கும் போஸ்டர்கள்.தமிழகம் முழுவதும் கோடை வெயில் சுட்டெரித்து வருகிறது., இந்த நிலையில்,  இன்று காலை முதல் வானிலை அப்படியே தலைகீழாக மாறியது , ஜெயலலிதாவின் அந்தர் பல்டி நாடகத்த பார்த்து.

இன்னும் பாக்கி, டில்லி ஜந்தர் மந்தரில் சோனியா காந்தி இலங்கைத் தமிழர்களுக்காக உண்ணாவிரதம் இருக்கவேண்டியது மட்டுமே. அது முடிந்ததும் கொழும்பில் மஹிந்தா, கொத்தபாயா, பேசில் மூவரும் தமிழர்களின் நலனுக்காக உண்ணாவிரதம் இருப்பார்கள்.

பிறகு அனைவரும் சேர்ந்து, இதுவரை தமிழர்களுக்காக உண்ணாவிரதம் இருக்காத ஒரே ஒருவர் பிரபாகரன் மட்டுமே என்றும் அதற்கான காரணத்தைத் தமிழர்களே புரிந்துகொள்வார்கள் என்றும் சொல்லி முடித்துவிடுவார்கள்.

Friday, March 6, 2009

சுஜாதா கேள்விகள்: கற்றதும் பெற்றதும் (ஆனந்த விகடன்)

இன்றைய தினங்களில் எல்லாமே விழுக்காடு அல்லது எண்ணிக்கைதான். பெண்களுக்கான இட ஒதுக்கீட்டிலிருந்து ஐ.ஐ.டி. அனுமதித் தேர்வு வரைவாழ்வில் உள்ள இலக்கங்களும் விழுக்காடுகளும் என்ன என்பதைத் தெரிந்துகொள்ள கீழ்க்காணும் கேள்விகளின் அருகில் ஒரு பென்சிலால் விடை எழுதிப் பாருங்கள் (பேனாவால் எழுதினால், அப்புறம் மாற்ற முடியாது).

நீங்கள் எத்தனை விழுக்காடு?

1. சம்பளத்தில் தர்ம காரியங்களுக்காக எவ்வளவு செலவழிக்கிறீர்கள்?

2. எத்தனைக் கடிதங்களுக்குப் பதில் எழுதுகிறீர்கள்?

3. எத்தனை மணி நேரம் வீட்டை ஒழித்து, சுத்தப்படுத்துகிறீர்கள்?

4. எத்தனை மணி நேரம் குடும்பத்துடன் செலவிடுகிறீர்கள்?

5. எத்தனை மணி நேரம் தூங்குகிறீர்கள்?

6. எத்தனை முறை ஓட்டுப் போட்டிருக்கிறீர்கள்?

7. அரட்டை அடிக்காமல் எத்தனை மணி நேரம் நிஜமாக வேலைசெய்கிறீர்கள்?

8. உங்களுக்கு எத்தனை ஆப்த நண்பர்கள்?

9. தினம் எத்தனை மணி நேரம் வேண்டாத வேலைகளைச் செய்கிறீர்கள்?

10. எத்தனை மணி நேரம் புத்தகம் படிக்கிறீர்கள்?

11. எவ்வளவு நேரம் டி.வி. பார்க்கிறீர்கள்? என்ன பார்க்கிறீர்கள்?

12. பாட்டு மட்டும் எவ்வளவு நேரம் கேட்கிறீர்கள்?

13. போன வருஷம் எத்தனை பேருக்குப் புத்தாண்டு, பொங்கல் வாழ்த்துஅனுப்பினீர்கள்?

14. தினம் எத்தனை மணி நேரம் செய்திப் பத்திரிகை படிக்கிறீர்கள்?

15. எத்தனை மணி நேரம் ஜஸ்ட் சும்மா இருக்கிறீர்கள்?

16. தினம் எத்தனை மணி நேரம் பஸ், ஸ்கூட்டர் அல்லது காரில்பயணிக்கிறீர்கள்?

17. பள்ளியில் உங்களுக்குப் பிடித்திருந்த பாடம் எது?

18. இப்போது பிடித்த நடிகர், நடிகை யார், யார்?

இந்த 18 கேள்விகளுக்கும் பதில் எழுதிவிட்டு… எனக்கு அனுப்பாதீர்கள்! ஒரு வாரம் கழித்து அவற்றைப் பாருங்கள். உங்களை நீங்களே அறிந்து கொள்வீர்கள். கீழ்க்கண்டவற்றில் ஒன்றை உங்களால் தேர்ந்தெடுக்க முடியும்.

நான் ஒரு…

1. சோம்பேறி

2. சாதாரண மனிதன்

3. நல்ல குடிமகன்

4. அறிவு ஜீவி

விஜய் மல்லையாவின் நாட்டுப்பற்றுக்கு சல்யூட்!


மகாத்மா காந்தி பயன்படுத்தியப் பொருட்களை இந்தியாவுக்கு மீட்டுவர மத்திய அரசு எவ்வளவோ முயற்சிகளை மேற்கொண்டும் பலனில்லாமல் போனது.
இந்தச் சூழலில் நியூயா‌ர்‌க்‌கி‌ன் பழ‌ம்பொரு‌‌ள் கா‌ட்‌சியக‌த்‌தி‌‌ல் உ‌ள்ள மகா‌த்மா கா‌ந்‌தி‌‌ பய‌ன்படு‌த்‌திய க‌ண்ணாடி, பா‌க்கெ‌ட் கடிகார‌ம், ஒரு ஜோடி கால‌ணிக‌ள், ஒரு த‌ட்டு, ஒரு குவளை ஆகிய பொரு‌ட்க‌ளை ஏலம் எடுத்ததுடன், அவற்றை தனது தாய்நாட்டுக்கே நன்கொடையாக அளிக்கிறார், இந்தியத் தொழிலதிபர் விஜய் மல்லையா!
மகாத்மா காந்தி பயன்படுத்திய ஐந்து பொருட்களை 18 லட்ச அமெரிக்க டாலர்கள் கொடுத்து, இந்திய தொழிலதிபர் விஜய் மல்லையா வாங்கியுள்ளார்.
இந்தியாவில் பிறந்து வெளிநாட்டில் தொழில்துறையில் வெற்றிக் கொடி நாட்டி, உலகச் செல்வந்தர்கள் பட்டியலில் இடம்பெற்று, தனது வாரிசின் திருமணத்துக்கு பல நூறு கோடி ரூபாய் செலவு செய்து தனது டாம்பீகத்தை உலகுக்கு உணர்த்தும் தொழிலதிபர்களுக்கு மத்தியில்….
தாய்நாட்டின் பாரம்பரியத்தைக் காப்பதற்காக ஏறத்தாழ பல கோடி ரூபாய் செலவில் காந்தியடிகளில் பொருட்களை மீட்டளித்துள்ள விஜய் மல்லையாவுக்கு சல்யூட்…!!!
அதேவேளையில், “டெல்லி உயர் நீதிமன்றத்தில் தடை உத்தரவு இருப்பதால், அரசு நேரடியாக ஏலத்தில் பங்கேற்க முடியாது. எனவே தொழிலதிபர் விஜய் மல்லையாவின் உதவியுடன் காந்தியின் பொருட்கள் இந்தியாவுக்கு கொண்டு வர முயற்சி மேற்கொள்ளப்பட்டது. காந்தியின் பொருட்களை கொண்டு வருவதற்கு பல்வேறு வகையில் போராடினோம். இது, ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசின் வெற்றியே,” என்று கலாச்சார துறை அமைச்சர் அம்பிகா சோனி இன்று காலை செய்தியாளர்களிடம் கூறியிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன என்பதையும் இங்கே பதிவு செய்கிறேன்.

Thursday, March 5, 2009

மொக்கைச்சாமி

மொக்கைச்சாமி, மொக்கைச்சாமின்னு ஒருத்தன். கடவுளை நோக்கி ரொம்ப நாளா தவம் இருந்தானாம். என்னடா வரம் வேணும்னு கடவுள் கேட்டாராம். இவன் சொன்னானாம்..

“கடவுளே.. எனக்கு சாவே வரக்கூடாது”

“அப்படியே ஆகுக”ன்னு சொல்லிட்டு சிரிச்சுட்டே போய்ட்டாராம் கடவுள்.

ரொம்ப நாள் காட்டுல தவம் இருந்தவன் வரம் பெற்ற இறுமாப்புல நெஞ்சை நிமித்தி நடந்து வந்துட்டிருக்கறப்ப.. ஒரு சாமியார் எதிர்ல வந்து

“யாரப்பா.. நீ?”ன்னு கேட்டாராம்..

இவன் சொன்னானாம்... “மொக்கைமாமி”

பாவம்.. அவனுக்கு ‘சா’வே வரல!

இசையும், தமிழும் இப்போதே இணையட்டும்!


இப்போதே கம்போசிங்கில் அமர்ந்துவிட மாட்டார்களா என்ற ஏக்கத்தை தந்திருக்கிறது இரண்டு மாபெரும் கலைஞர்களின் பேச்சு! 'நீராரும் கடலுடுத்த...' பாடலை போல உலகம் முழுவதும் உள்ள தமிழர்கள் வணங்குகிற மாதிரி ஒரு தமிழ் தாய் வாழ்த்தை எழுத வேண்டும். அதற்கு ரஹ்மான் இசையமைக்க வேண்டும் என்று கூறியிருந்தார் கவிப்பேரரசு வைரமுத்து.

அவர் எப்போது எழுதி தருகிறாரோ, அப்போதே அந்த பாடலை உருவாக்குவதற்கான பணியில் இறங்குவேன் என்று கூறியிருந்தார் இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான். இவ்விரு கலைஞர்களும் உருவாக்கப் போகும் இந்த பாடல் காற்றுள்ளவரை உலகமெல்லாம் இசைக்கப்படும் என்ற நம்பிக்கையும், ஆர்வமும் இப்போதே தமிழர்களிடம் நிறைந்துள்ளது.

இலக்கிய உலகிலும், இசையுலகிலும் கொடிகட்டி பறக்கும் இருவரும், அதற்கான நேரத்தை ஒதுக்குவது என்பது சற்று சிரமமான காரியம்தான். பல்வேறு பரபரப்புகளுக்கு இடையே இதையும் செய்து முடித்து சீக்கிரம் வெளியிட்டால், தமிழனின் ஆயுளை கூட்டிய புண்ணியம் கிடைக்கும் இவர்களுக்கு!

செய்வீர்களா, ஜாம்பவான்களே....?

ஐயோ ஐயோ , எப்பவுமே காமெடிதான்


சென்னை: அதிமுக கூட்டணிக்கு 40 எம்.பிக்கள் கிடைத்தால் போதும். அடுத்த பிரதமர் ஒரு தமிழர்தான். அந்த மாயாஜாலத்தை நான் நிகழ்த்திக் காட்டுகிறேன் என்று பேசியுள்ளார் ஜனதாக் கட்சித் தலைவர் சுப்ரமணியம் சாமி.

அனல் பறக்கும் அரசியல் களத்தை அவ்வப்போது ஜாலியாக்குவது சாமியின் தடாலடி பேச்சுக்கள்தான். அந்த வகையில், 40 எம்.பிக்கள் அதிமுகவுக்குக் கிடைத்தால், ஒரு தமிழரை பிரதமராக்கி விடுவேன் என்று கூறியுள்ளார் சாமி.

இதுகுறித்து அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், அதிமுக கூட்டணிக்கு தமிழகத்திலும், புதுவையிலும் 40 எம்.பிக்கள் கிடைத்து விட்டால் (அதாவது எல்லாவற்றிலும் அவர்களே ஜெயித்தால்) அடுத்த பிரதமராக ஒரு தமிழரை அமர வைப்பது எனது வேலையாகும். அந்த மாயாஜாலத்தை நான் நிகழ்த்திக் காட்டுவேன்.

உயர்நீதிமன்ற வக்கீல்கள் செய்து வரும் வேலைநிறுத்தம் சட்டவிரோதமானது. எனவே அவர்கள் மீது சுப்ரீம் கோர்ட் நீதிமன்ற அவமதிப்பு வழக்கை தொடர வேண்டும்.

உச்சநீதிமன்றம் வேலைக்குப் போங்கள் என்று கூறியும் அவர்கள் வேலைக்குப் போகாமல் ஸ்டிரைக் செய்து கொண்டுள்ளனர்.

லாகூரில் இலங்கை வீரர்கள் தாக்கப்பட்ட சம்பவத்தில் விடுதலைப் புலிகளுக்குத் தொடர்பு இருக்கிறது. அல் கொய்தா மற்றும் தலிபான்களுடன் விடுதலைப் புலிகள் கை கோர்த்துள்ளனர் என்று நான் ஏற்கனவே கூறியிருக்கிறேன். இப்போது அது உண்மையாகி விட்டது என்றார் சாமி.

ஐயோ ஐயோ!!!

Monday, March 2, 2009

காலிலே (ஷு)போன் இருந்தால்…


செல்போன்களை மற‌ந்து வைத்துவிடாமல் இருக்க சிற‌ந்த வழி அவற்றை காலில் அணிந்துகொள்வது தான். அதாவது ஷுபோன் வாங்கி பயன்படுத்துவதுதான்.

ஷுபோனா அதென்ன என்று கொஞச‌ம் வியப்படையுங்கள்.

ஆஸ்திரேலியாவின் அடிலைடில் உள்ள பிலின்டர்ஸ் பல்கலையை சேர்ந்த பால் கார்டினர் ஸ்டிஃபன் காலில் அணிந்து கொள்ளகூடிய ஷுபோனை வடிவமைத்துள்ளார்.

செல்போன் பொறுத்தப்பட்ட இந்த ஷுவை காலில் அணிந்து கொள்ளலாம். அழைப்பு வரும் போது கையில் ஷுவை எடுத்து பேசவும் செய்யலாம். முதலில் இந்த ஷுவை ஸ்டிஃபன் விளையாட்டாக உருவாக்கினாலும், அடிப்படையில் ஒரு நோக்கம் இருந்தது.

செல்போன் போன்ற வயர்லஸ் தொழில்நுட்பத்தை தினந்தோறும் பயன்படுத்தும் சாதனங்களில் எப்படி இணைப்பது என்று காண்பிப்பதே அந்த நோக்கம்.

இதனை அவர் வெற்றிகரமாக செய்து முடித்திருக்கிறார்.இந்த ஷுபோனுக்காக அவர் அமைத்துள்ள இணைய பக்கத்தில் உலகின் முதல் வெற்றிகரமான ஷுபோன் இது என்று பெருமைப்பட்டுக்கொண்டுள்ளார்.

இதனை அவர் சும்மா சொல்லிவிடவில்லை. ஷுபோனுக்கென்று ஒரு இலக்கண‌ம் இருப்பதாக சொல்கிறார்.

அந்த ஷு மணிக்கணக்கில் அணியக்கூடியதாக இருக்க வேண்டும். ஒரு போனைப்போலவே பேச முடிய வேண்டும்.செல்போன் போல் எங்கும் எடுத்துச்செல்ல வேண்டும்.வேறு தொலைபேசி இணைப்பு தேவைப்படக்கூடாது.

இதற்கு முன் ஒரு சில ஷுபோன்கள் உருவாக்கப்பட்டிருந்தாலும் இந்த இலக்கணத்தை அவை பூர்த்தி செய்த‌தில்லை என்கிறார்.

ஷுபோன்களிலே மிகவும் பிரபலமானது மாக்ஸ்வல் ஸ்மார்ட் என்னும் டிவி பாத்திரம் அணிந்து கொண்டது தான்.

அமெரிக்க தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகிய ஜேம்ஸ்பாண்டு பாணியிலான இந்த தொடரில் ஸ்மார்ட் பாத்திரத்தில் நடித்த ஒரு காட்சியில் காலில் இருக்கும் ஷுவை கையில் எடுத்து அட்டகாசமாக பேசுவார். ரசிகர்கள் மத்தியில் இந்த காட்சியும் ,ஷுவும் ரொம்ப பிரபலம்.

ஆனால் இந்த போனில் பேச மட்டுமே முடியும். திருப்பி அழைக்க முடியாது.

எனவே தன்னுடையது தான் உண்மையான முழு ஷுபோன் என்கிறார்.

இப்போதைக்கு வெறும் தொழில்நுட்ப சாகசம் மட்டுமே என்றாலும் எதிர்காலத்தில் இவை பலவிதங்களில் பயன்படும் என்கிறார் ஸ்டிஃபன் .

உதாரணத்திற்கு வயதான நோயாளிள் இதனை அணிந்து கொண்டால் அதில் உள்ள சென்ஸார் அவர்கள் கீழே விழுந்தால் அதை உணர்ந்துக்கொண்டு உடனே மருத்துவரை தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கும். மேலும் ர‌த்த அழுத்தத்தை கண்காணிப்பது, இதயத்துடிப்பை கண்காணிப்ப போன்றவற்றையும் மேற்கொள்ள முடியும்.

இந்த போனில் அவர் பேசும் காட்சி யூட்யூப்பில் காணக்கிடைக்கிறது.

——–
link;
http://www.youtube.com/watch?v=COpTlD2WIVE&eurl=http://news.cnet.com/8301-17938_105-10173054-1.html