Friday, July 10, 2009

படித்ததில் பிடித்தது ..


கதை ?

இது ஒரு sudden fiction கதை வடிவம் -நெட்டில் படிக்க கிடைத்தது(சுஜாதா சொல்லியது ) -இதன் அர்த்தத்தை சொல்கிறவர்கள் மிகவும் புத்திசாலிகள்(நான் விடையை பார்த்துதான் புரிந்து கொண்டேன் ). இனி அந்த கதை :


ஒரு அப்பா, ஒரு அம்மா; ஒரே மகன் பைத்தியமாகி ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டிருக்கிறான். ஆஸ்பத்திரி வேறு ஊரில் இருக்கிறது.

பெற்றோர்களுக்கு ஒரு தினம் ஆஸ்பத்திரியிலிருந்து டெலிபோன் வருகிறது. பையன் நிலை கவலைக்கிடமாக இருப்பதாகவும் உடனே புறப்பட்டு வரும்படியும். உடனே என்றால் மறுதினம் தான் போக முடியும்; அதற்குள் என்ன நேர்ந்துவிடுமோ என்று கவலைக் கடலில் இரவெல்லாம் விழித்துக்கொண்டிருக்கிறார்கள். அப்போது:

டெலிபோன் மணி அடிக்கிறது. பதற்றத்துடன், பயத்துடன் அதை எடுக்கிறார் அப்பா.

"ஹென்றி இருக்கிறானா?" என்கிறது ஒரு பெண் குரல்.
"ஹென்றி என்று இங்கு ஒருவரும் இல்லை; தப்பு நம்பர்" என்று வைத்துவிடுகிறார்.

மறுபடியும் சில நிமிஷம் கழித்து டெலிபோன் அடிக்கிறது.
"ஹென்றி இருக்கிறானா?" அதே பெண்.
"மிஸ், உனக்கு என்ன நம்பர் வேண்டும்?"
"5365849"
"என் நம்பர் 5365840- ஒன்பதுக்கு பதில் சைபரைச் சுழற்றுகிறாய் போலிருக்கிறது"
"ரொம்ப தாங்க்ஸ்" என்று அந்த பெண் வைத்துவிடுகிறாள்.
சில நிமிஷம் கழித்து மீண்டும் டெலிபோன் மணி அடிக்கிறது.

----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

மொக்கை

அமெரிக்காவைக் கண்டுபிடித்தவர் யார்?

"அதை மறைத்து வைத்தவர் யார் என்று முதலில் நீர் சொல்லும்...'

மிகப் பெரிய கண்டம் எது?

"வாழ்வில் எத்தனையோ கண்டங்களைத் தாண்டி வந்து விட்டேன். அதில், இந்தப் பரீட்சை தான் மிகப் பெரிய கண்டம்...'

பருவ மழை பெய்வதற்கு நீர் கூறும் காரணங்கள்?

"நான் எந்தக் காரணமும் கூறத் தயாராக இல்லை...'

பிரான்சில் ஓடும் மிகப் பெரிய நதி எது?

"விசா வரட்டும்; போய் விசாரித்து வருகிறேன்...'

ஊசியிலைக் காடுகள் என்றால் என்ன?

"ஊசியிலைக் காடுகள் தான்!'

பூமத்திய ரேகை எங்கே ஓடுகிறது'

"அது எங்கேயும் ஓடவில்லை; ஒரே இடத்தில் தான் இருக்கிறது...'

20 comments:

வால்பையன் said...

மொக்கைகள் நல்லாயிருக்கு!

ஆனா கதைக்கு அர்த்தம் எனக்கு புரியல!
கொஞ்சம் சொல்லுங்களேன்!

சூரியன் said...

நன்றி வாலுஜி ,

யாராச்சும் விடை சொல்றாங்களானு பார்ப்போம் ..

குறை ஒன்றும் இல்லை !!! said...

ஹ்ம்ம்.. சரி.. பாத்துக்கலாம்..

தேவன் மாயம் said...

சூரியன்!!
மொக்கஒயெல்லாம் சூப்பர்!! சிக்கன் ஸ்பெசலாக செய்து சாப்பிடவும்! என்னுடன் ஜி டாக் முடிந்தால் வரவும்!!

சுரேஷ் குமார் said...

//
சில நிமிஷம் கழித்து மீண்டும் டெலிபோன் மணி அடிக்கிறது.
//
இந்த தபா யாரு பண்ணினது..

நீங்களா பாஸு..

சுரேஷ் குமார் said...

//
ஊசியிலைக் காடுகள் என்றால் என்ன?

"ஊசியிலைக் காடுகள் தான்!'
//
ஜூப்பரு..

சுரேஷ் குமார் said...

//
சூரியன் said...

நன்றி வாலுஜி ,

யாராச்சும் விடை சொல்றாங்களானு பார்ப்போம் ..
//
ஓ.. கதை கமால நிக்கிதா..
சொல்லவே இல்லை..

புல்ஸ்டாப் வைங்கப்பா..

சூரியன் said...

////
சில நிமிஷம் கழித்து மீண்டும் டெலிபோன் மணி அடிக்கிறது.
//
இந்த தபா யாரு பண்ணினது..

நீங்களா பாஸு..//

ஒரு வேளை நீங்களா இருக்கும்னு எனக்கு சந்தேகமா இருக்கு ..

பிரியமுடன்.........வசந்த் said...

மொக்கை கடலில் நீந்துகிறீர்கள் போல?

பிரியமுடன்.........வசந்த் said...

அவ போன் பண்ணுனது அந்த வீட்டோட சரியான போன் நம்பர் தெரிஞ்சுக்கிடவா?

சூரியன் said...

//ஓ.. கதை கமால நிக்கிதா..
சொல்லவே இல்லை..

புல்ஸ்டாப் வைங்கப்பா//

ஆமா ராசா சுரேசு எதாச்சும் செஞ்சு முடிச்சு வைய்யா..

விக்னேஷ்வரி said...

ஒரு வேளை இப்போது பையனுக்கு எதுவும் ஆகி விட்டதா? மருத்துவமனையிலிருந்து வந்த டெலிபோன் காலா?

இய‌ற்கை said...
This comment has been removed by the author.
இய‌ற்கை said...

ஹ்ம்ம்..

சூரியன் said...

நன்றி வசந்த்,
அவ போன் பண்ணுனது அந்த வீட்டோட சரியான போன் நம்பர் தெரிஞ்சுக்கிடவா?
சரியான போன் நம்பர் தெரிய அந்த நம்பருக்கு போன் பண்ணுவாங்கலா என்ன ?

சூரியன் said...

//
விக்னேஷ்வரி said...
ஒரு வேளை இப்போது பையனுக்கு எதுவும் ஆகி விட்டதா? மருத்துவமனையிலிருந்து வந்த டெலிபோன் காலா?
//

இருக்கலாம் இல்ல எல்லா காலும் மருத்துவமனையில் இருந்து வந்ததா கூட இருக்கலாம் ..

ஆனா இதுவும் இல்லாமலும் இருக்கலாம்..


நன்றி தங்கள் வருகைக்கு ம்ற்றும் இயற்கைக்கும் ..

சந்ரு said...

மொக்கை அருமை..

सुREஷ் कुMAர் said...

http://wettipedia.blogspot.com/2009/07/blog-post_17.html க்கு வந்து விழாவில் கலந்துகொள்ளவும்..

Annamalai Iruchandran said...

I think the call will be coming from hospital. He would have died also .But the previous call was coming from his lover. I am sure.Am I right Sun sir.

Selva said...

may be the call they got was a wrong call and might have been somebody else who was in sick/serious.. they just have to call the hospital that they admitted him and confirm.

selva,
bangalore