Tuesday, June 2, 2009

cofeeday - வயிற்றெரிச்சல்

ஞாயிற்றுக்கிழமை நானும் என் நண்பர்கள் இருவரும் வழக்கமாக சமையல் பொருட்கள் வாங்க டோட்டல்க்கு போனோம்.என் கூட வந்தவன் கையிலே கொஞ்சம் உணவு கூப்பன் வைத்திருந்தான்,அது பாக்கெட்ல கனமா இருந்துச்சு போல,மேலும் ரெண்டு மூணு பிகருக வேற அங்க இருந்துச்சு .என்னைக்கும் இல்லாத திருநாளா , வா மச்சான் cofeeday போய் ஒரு cofee குடிக்கலாம்னு சொன்னான்.சரி நம்ம காச , ஒசில கிடைச்சா எதுனாலும் சாப்பிட ரெடினு சொல்ற கூட்டம்ல நாம. வா மச்சான் போவம்னு போய் உக்காந்தாச்சு..

போய் உக்காந்து அஞ்சு நிமிசமாச்சு ஒரு பய பக்கத்துல வரல , உடனே நம்ம கூட வந்தவரு புரோட்ட 
கடையிலே கூப்பிடுற பழக்க தோசத்துல பாசு இங்க வாங்க அப்படினு ஒரு சவுண்ட விட்டாரு பாருங்க , பக்கத்துல உக்காந்த அத்தனை பேரும் ஒரு அபவ்டன் போட்டு மொத்தமா பார்வையிலேயே மொக்கி எடுத்தானுக.பயபுள்ளக அப்பவும் என்ன வேணும் கேட்டு ஒருத்தனும் வரல .

 சரிடானு சொல்லிட்டு எதோ மேசையிலே ஒரு அட்டை இருந்துச்சு , அதான் மெனு காடா இருக்கும்னு புரட்டி புரட்டி பார்ததா மொத்தமே ஒரு மூணு வெரைட்டி காஃபி போட்டிருந்துச்சு பேரு ஒண்ணும் விளங்கல , சரி எது கம்மி விலையில இருக்குனு பாத்து இத சொல்வம்டானு பக்கத்துல் உள்ளவண்ட சொன்னா ரெண்டு பேரும் ஆளுக்கு ஒரு பக்கம் திரும்பி அந்த வழியா போற வர்ற புள்ளைகலெல்லாம் சைட் அடிச்சுக்கிட்டு இருக்காங்கே. அடங்கொய்யால ஏண்ட என்கிட்ட சொல்லலேனு ஒரு சண்டைய போட்டுட்டு , நானும் அதில் ஐக்கிமாயிட்டேன் .அப்பவும் ஒருத்தனும் வந்து என்ன வேணும்னு கேக்கல , ஒரு வேளை இதுக்குதான் cofee dayகு பிகருகல கூட்டிட்டு வர்றாங்கலோ ஒருத்தனும் தொந்தரவு பண்ணமாட்டானு.

கடைசியா வந்து மெனு கார்டு கொடுத்தான். அப்பா முதல்ல பார்த்தது (?) இதிலே நிறைய அயிட்டம் 
இருந்துச்சு (நம்ம அயிட்டம் விஸ்கி பிராண்டி இல்லப்பா).சரி இதிலே பாப்போம்னு தேடுனா நம்ம 
அயிட்டம்(அதான்பா விஸ்கி) கலந்து ஒரு காஃபி , உடனே மூணு பேருக்கும் அத சொல்லி கொண்டு வாங்கனு சொல்லிட்டோம்ல.பேரெல்லாம் தெரில.கொண்டு வரேன்னு சொல்லிட்டு போனவன் அதுக்கப்புறம் ஆள காணோம் .சரினு திரும்பவும் ஜோதில(ஃபிகருகல நோட்டம் விடுறதுதான்) கலந்தாச்சு.

ஒரு பத்து நிமிடம் கழிச்சு கொண்டு வந்து வச்சான்.காஃபி ஒரு டம்ளர்லயும்,ஒரு பாக்கெட்டும் , என்னடானு பாத்த சீனி.அடப்பாவி 60 ரு காஃபி வாங்கினா சீனி கலந்து கொடுக்க மாட்டிங்களாயா நாங்கதான் கலக்கனுமானு பக்கதுல உள்ளவன் கேட்டான்.சீனிய கலக்கி வாயில காஃபிய வச்சா சுடுதண்ணி மாதிரி அப்படியே இருக்கு , ஒரு பாக்கட் சீனி போட்டும் இனிப்பே இல்ல .சீனிய அந்த கலக்கு கலக்கினதுல இனிப்பு சேந்துச்சோ சேரலியோ ஆனா காஃபி உள்ள போனதும் எனக்குள் கலக்க ஆரம்பிச்சுருச்சு. மூனு பேரும் ஒருத்தருக்கொருத்தர் பாத்து சிரிச்சுகிட்டே சூப்பரா இருக்குடானு சொல்லிக்கிட்டோம்.கஷ்டப்பட்டு சுடு தண்ணிய சாரி காஃபிய குடிச்சுட்டு கொய்யாலே இனி வாழ்வுக்கும் cofee day பக்கமே போககூடாதுனு ஒரு கும்பிட போட்டு வந்தேன்..

டிஸ்கி:
----
      200 ரூபாய்கு 3 காபி வாங்கி சாப்பிட்ட நாங்க , வீட்டிற்கு பக்கத்தில் உள்ள 3 ரூ டீ நல்லாவே 
இல்லேனு கடைக்காரன்கிட்ட சண்டை போடுற ஆளுக .

11 comments:

ஆ.ஞானசேகரன் said...

நல்ல காஃபி சாப்பிட்ட அனுபவம்...

பிரியமுடன்.........வசந்த் said...

இருக்குறவன் வச்சுக்கிறான்

இல்லாதவன் வரைஞ்சுக்கிறான்

நசரேயன் said...

காபி குடிக்க குடுத்த காசுக்கு காபி கடையே வைக்கலாம்

Suresh said...

ஹா ஹா மிக அருமை நண்பா நம்ம மாதிரி தான் நீங்களும் காபி ஷாப்பில் கூட கல்ல்குடிங்க

உங்க பதிவு இளைமை விகடனில்

வால்பையன் said...

எனக்கு காபி குடிக்கும் பழக்கமில்லை!
ஆனால் அதில் கலந்து குடித்தீர்களே விஸ்கி!
அதை கொடுத்தால் ருசித்து ருசித்து குடிப்பேன்!

சூரியன் said...

நன்றி ஆ.ஞானசேகரன்...

//நசரேயன் said...
காபி குடிக்க குடுத்த காசுக்கு காபி கடையே வைக்கலாம்//

என்ன பண்ண நசரேயன் , இப்படித்தான் நம்ம காச ஆசை காட்டி புடுங்குறாங்கே..ஆனாலும் நான் காசு குடுக்கலேல , கூட வந்தவனுக்கு கும்மிய போட்டாச்சு...

சூரியன் said...

//பிரியமுடன்.........வசந்த் said...
இருக்குறவன் வச்சுக்கிறான்

இல்லாதவன் வரைஞ்சுக்கிறான்//

நன்றி வசந்த்..

சூரியன் said...

//Suresh said...
ஹா ஹா மிக அருமை நண்பா நம்ம மாதிரி தான் நீங்களும் காபி ஷாப்பில் கூட கல்ல்குடிங்க

உங்க பதிவு இளைமை விகடனில்//

வருகைக்கு நன்றி .. இளைமை விகடனில் வரும் ஆனா வராதுனு சொல்றிங்களோ...

சூரியன் said...

//வால்பையன் said...
எனக்கு காபி குடிக்கும் பழக்கமில்லை!
ஆனால் அதில் கலந்து குடித்தீர்களே விஸ்கி!
அதை கொடுத்தால் ருசித்து ருசித்து குடிப்பேன்!//

வால்ண்ணா நானும்தான் , பாருங்க காஃபி கடையிலேயே நம்ம அயிட்டத்த தேடி சாப்பிடுறேன்..

SUREஷ் (பழனியிலிருந்து) said...

தமிழ் மணத்துக்கு அனுப்ப மணம் இல்லையா தல..,

Anonymous said...

U guys................ argh......