Wednesday, July 1, 2009

நீங்க ரொம்ப நல்ல டாக்டருங்கோ..

எந்த பேப்பர படிச்சாலும் இல்லை பெருசுகள பாத்தாலும் காய்கறிய தின்னு , குடிக்காதே , உடற்பயிற்சி பண்ணுனு தாளிச்சிட்டு இருக்காங்க . நாமெல்லாம் 3 நாளுக்கு ஒரு தடவை கோழிய பார்க்கலேனா கோழி சண்டைக்கு வந்துரும் .அதனாலேயே கோழிக்கு 3 நாளுக்கு ஒரு ஹாய் சொல்லி வாய்ல போடுறது வழக்கம் .நானும் இந்த் கொசு(அதான் இந்த அறிவுரை) தொல்லை தாங்க முடியாம ஒரு பிரபல டாக்டரிடம் போய் கேட்டுட்டு வருவோம்னு போனதுல கிடைத்த தகவலை உங்ககிட்ட பகிர்ந்துக்கிறேன் ...

1.டாக்டர் தினமும் இருதய சம்பந்தமான உடற்பயிற்சி செஞ்சா , அதிக நாள் வாழலாமா உண்மையா ?

இருதயம் எவ்வளவு துடிக்கனுமோ அதுக்கு ஒரு அளவு இருக்கு ஒவ்வொரு உடம்புக்கு ஏத்த மாதிரி அது வேறுபடும் .உடற்பயிற்ச்சி செஞ்சு இருதய துடிப்ப அதிகமாக்குவதால் அதிக நாள் வாழ்கைய நீடிக்க முடியாது.நீங்கள் சொல்வது எப்படி இருக்குனா ரொம்ப வேகமா கார் ஓட்டுனா கார் அதிக நாள் நல்லா இருக்கும்னு சொல்ற மாதிரி இருக்கு . அதனாலே உடற்பயிற்சி செஞ்சு உங்க நேரத்தை வீணடிக்காதீங்க.

2.நான் அசைவத்தை குறைத்து காய் கனிகளை அதிகமா சாப்பிடனுமா ?

உங்களுக்கு ஒண்ணுமே தெரியாதா என்ன . கோழி,ஆடு,மாடு என்ன சாப்பிடுது? நெல்,பருப்பு,வைக்கோல் , புல்லு , புண்ணாக்கு,சோளம் .இதெல்லாம் காய்கறிகள் தானே ? அதனால ஆடு மாடு சாப்பிடும் காய்கறிகள் நம்ம உடலுக்குள் கோழி,ஆடு,மாடுகளை சாப்பிடும்போது இன்னும் பல சத்துக்களோடு நம் உடலுக்கு தானா வந்துரும்.

3.நான் மது குடிப்பதை குறைத்துக்கொள்ள வேண்டுமா ?
தேவையில்லை.மது அதில் இருந்து தயாரிக்கப்படுது? பழங்களில் இருந்துதானே.பீரும் மதுவும் தண்ணீர் எடுக்கப்பட்ட பழங்களில் இருந்து தயாரிக்கப்படுது.அதனாலே தண்ணீர் இல்லா பழம் உங்க உடலுக்கு போகுது. அதனால் நீங்க மது அருந்துவதை குறைக்க தேவையில்லை.

4.என்னுடைய உடம்பு/கொழுப்பு சதவீதத்தை எப்படி கணக்கீடுவது ?

அதாவது ஒரு உடம்பும் கொழுப்பும் உங்ககிட்ட இருந்தா ஒண்ணுக்கு ஓண்ணு. ரெண்டு உடம்பு ஒரு கொழுப்பு இருந்தா ரெண்டுக்கு ஓண்ணு இப்டிதான் ..

5.தினசரி உடற்பயிற்சியின் அவசியம் நண்மைகள் ?
இதை என்னால் ஏற்றுக்கொள்ளவே முடியாது. என்னோட தத்துவம் வலியில்லாமல் இருபபது மட்டுமே நல்லது.தினம் உடற்பயிற்ச்சி செய்து உடலை வருத்துவதில் எனக்கு உடன்பாடு இல்லை.

6.எண்ணை அதிகம் சேர்த்துக்கொள்ளலாமா சமைக்கும் போது ?

நான் சொல்வதை கேக்குறீங்களா என்ன ? எண்ணை எதில் இருந்து எடுக்கிறார்கள் எள்ளு அல்லது ஏதாவது பருப்பு காய்கறியில் இருந்து . உடம்புக்கு காய்கறி பருப்பு சேர்ப்பது தப்புனு எப்பவாது சொன்னேனா நான் ?

7.அதிகமா உக்காந்து எந்திரிக்கும் பயிற்ச்சி செஞ்சா என் வயிற்றுப்பகுதி சின்னதாக மாறுமா ?

கண்டிப்பா மாறாது. அதிகமா வேலை குடுக்கும் தசைகள் பெரிதாக வளரத்தான் செய்யுமே தவிர சிறிதாகாது.பெரிய வயிறு வேணும்னா இதை நீங்கள் செய்யலாம்.

8.நீந்துவதால் நல்ல உடல் அமைப்பு கிடைக்குமா ?
தெரில ஆனால் தினம் நீந்துகிற திமிங்கலம் ஏன் இப்படி இருக்குனு சொன்னீங்கனா பரவால்ல.

9.கட்டமைப்பான உடல் உருவம் தேவையா ?
நல்ல குண்டான வட்டமானதும் உருவம்தான் ..

10.சாக்லேட் சாப்பிடலமா டாக்டர் ?
நீ இவ்ளோ நேரம் காத இங்க போட்டியா இல்ல பக்கத்துல உள்ள் நர்ஸ்ட்ட காதல் அம்பு விட்டியா.. சாக்லேட் எதில் இருந்து வருது . அதுவும் (சொல்ல தேவையில்லேனு நினைக்கிறேன் உங்களுக்கு தெரியும் )


இவருட்ட பேசிட்டு வெளிய வந்ததும்தான் அப்பாடானு இருந்துச்சு.நாமெல்லாம் தண்ணீர் இல்லாமல் கூட இருப்போம் ஆனால் நல்ல தண்ணீர்(வேறென்ன பீர்தான்) இல்லாமல் இருக்க முடியுமா.நீங்க ரொம்ப நல்ல டாகடர்னு சொல்லிட்டு வந்தேன் .. இந்த டாக்டர் பத்தி நீங்க நினைக்கிறத் இங்க எழுதிட்டு போங்க மக்கா..

19 comments:

ஜெகநாதன் said...

நல்ல காமடி.
இதையவே இங்கிலீஷ்ல படிச்ச ஞாபகம். உங்க ​கைவரிசைல தமிழ்ல படிச்சது மகிழ்ச்சி. பாத்து படிக்கிற கனவான்கள் இது ஒரிஜினல் டாக்டரோட அட்வைஸ்னு நினைச்சுக்கப் போறாங்க

சுரேஷ் குமார் said...

//
கோழி,ஆடு,மாடுகளை சாப்பிடும்போது இன்னும் பல சத்துக்களோடு நம் உடலுக்கு தானா வந்துரும்.
//
ஹீ.. ஹீ..சத்துக்கள் மட்டும்தானே..!

சுரேஷ் குமார் said...

//
.பீரும் மதுவும் தண்ணீர் எடுக்கப்பட்ட பழங்களில் இருந்து தயாரிக்கப்படுது.அதனாலே தண்ணீர் இல்லா பழம் உங்க உடலுக்கு போகுது.
//
வெளங்கிடும்..
யாருப்பா அந்த டாக்டர்..

சுரேஷ் குமார் said...

//
ரெண்டு உடம்பு ஒரு கொழுப்பு இருந்தா ரெண்டுக்கு ஓண்ணு இப்டிதான் ..
//
ஒன்னு ரெண்டுன்னு வரிசைப்படுத்திருக்கின்களே.. என்னாது..?
லிட்டர் கணக்குல சொல்லிருந்தாகூட பரவால..

சூரியன் said...

நன்றி ஜெகன் வருகைக்கு..

சுரேஷ் குமார் said...
//ஹீ.. ஹீ..சத்துக்கள் மட்டும்தானே//

ஆமாய்யா அதான் சமைக்கும் போது சுத்தம் பண்றோம்ல.கவலைபடாதீங்க வேறெதுல் இல்லை..

//யாருப்பா அந்த டாக்டர்..//

அஸ்கு புஸ்கு சொல்ல மாட்டேனே...

சுரேஷ் குமார் said...

//
அதிகமா வேலை குடுக்கும் தசைகள் பெரிதாக வளரத்தான் செய்யுமே தவிர சிறிதாகாது
//
ஆஹாஹாஹா..

சுரேஷ் குமார் said...

//
8.நீந்துவதால் நல்ல உடல் அமைப்பு கிடைக்குமா ?
தெரில ஆனால் தினம் நீந்துகிற திமிங்கலம் ஏன் இப்படி இருக்குனு சொன்னீங்கனா பரவால்ல.
//
அதுவும் நல்ல உடல் அமைப்பு தான்பா (அதுக்கும், அத கூறு போட்டு விக்கிரவங்களுக்கும்)

சுரேஷ் குமார் said...

//
ஆமாய்யா அதான் சமைக்கும் போது சுத்தம் பண்றோம்ல.கவலைபடாதீங்க வேறெதுல் இல்லை.
//
அதெப்படி.. சுத்தம் பண்ணும்போது சத்துக்கள் தவிர மீதியெல்லாம் மட்டும் கரீட்டா போய்டுது..
லாஜிக் ஒதைக்குதே..

சூரியன் said...

/அதெப்படி.. சுத்தம் பண்ணும்போது சத்துக்கள் தவிர மீதியெல்லாம் மட்டும் கரீட்டா போய்டுது..
லாஜிக் ஒதைக்குதே//

சில நேரம் அது சேர்ந்து வந்தாலும் அதுவும் ஒரு வகையான சத்துனு டாக்டர் சொன்னாருப்பா.. உங்களுக்காக டாக்டர்ட்ட போன் பண்ணி கேட்டேன் .

Joe said...

I like that doctor, thank you! ;-)

எம்.பி.உதயசூரியன் said...

அட கொலகாரப்பயலுகளா! இம்புட்டு நல்ல விஷயத்தை இவ்வளவு லேட்டா சொல்லித்தொலையறதாப்பா? எப்படியோ ‘கெட்டு ‘GOOD'டிச்சுவரா போங்க!

சூரியன் said...

‘GOOD'டிச்சுவரா போங்கனு வாழ்த்திய உ.பி எம்.பி.உதயசூரியனக்கு நன்றிகள் பல .

சூரியன் said...

வந்தமைக்கு நன்றி ஜோ..

thevanmayam said...

நல்லா சொன்னீங்க நண்பரே!!1

Suresh Kumar said...

தேவையில்லை.மது அதில் இருந்து தயாரிக்கப்படுது? பழங்களில் இருந்துதானே.பீரும் மதுவும் தண்ணீர் எடுக்கப்பட்ட பழங்களில் இருந்து தயாரிக்கப்படுது.அதனாலே தண்ணீர் இல்லா பழம் உங்க உடலுக்கு போகுது. அதனால் நீங்க மது அருந்துவதை குறைக்க தேவையில்லை./////////////


நல்ல டாக்டரா இருக்கிறாரே

வால்பையன் said...

அட்ரஸ் கொடுங்க இனிமே இவர் தான் எனக்கு டாக்டர்!

ஜீவன் said...

புதிய பார்வை கலக்கல்!!!

நாடோடி இலக்கியன் said...

//அட்ரஸ் கொடுங்க இனிமே இவர் தான் எனக்கு டாக்டர்!//

நானும் இதை ரிப்பீட்டிக்கிறேன்.

உங்களுக்கு புடிச்ச கிராமத்துப் பதிவு இன்னைக்கு ஒன்னு போட்டிருக்கேனே பார்தீங்களா?

Anonymous said...

வாய் விட்டுச் சிரித்தேன்... கன்பாமா ரூம் போட்டு யோசிக்கிற பய தான்.