Friday, July 24, 2009

கேக்ககூடாத கேள்விகள் பத்து .

எந்த இடத்துல எப்படில்லாம் கேள்வி கேக்க கூடாதோ அப்படி கேட்டால் வரும் பதில்கள்.அபியும் நானும்ல பிரகாஷ்ராஜ் மனோக்கு சொல்வாரே அது போல சில.

1.திரையரங்குகளில் நிக்கும் போது தெரிந்தவன் யாரச்சும் வந்தானா , அவன பாத்து என்ன மச்சி இங்க என்ன பண்ணீட்டு இருக்கே . படம் பாக்க வந்தியா ?

உனக்கு தெரியாதா , நான் இங்கதான் பிளாக்ல டிக்கெட் விக்கிறேன் உனக்கு வேணுமா ?

2.பேருந்துல போய்ட்டு இருக்கும்போது , ஒரு குண்டு அம்மா ஹீல்ஸ் அதும் குச்சியா இருக்குமே அப்படி ஒண்ண கால்ல போட்டுட்டு நம்ம கால்ல மிதிச்சுட்டு, சாரி வலிக்குதா ?

இல்ல இல்ல பரவால்ல , நான் மயக்கத்துல தான் இருக்கேன் வலிக்காது ஏன் இன்னொரு தடவை நீங்க டிரை பண்ணி பார்க்கலாமே.

3.சாவு வீட்ல கண்ணீர் பெருக்கெடுத்து அழுதுகிட்டே, ஏன் ஏன் இவ்ளோ பேர் இருக்கும்போது இவர மட்டும் ?

ஏண்டா நாரவாயா , அப்போ இவனுக்கு பதிலா நீ போறீயா ?

4.ரெஸ்டாரெண்ட்ல ஆர்டர் கொடுக்கும் போது சர்வர்ட்ட ,இங்க தோசை நல்லா இருக்குமா?
தோசை நல்லா ஸ்ட்ராங்காவும் டேஸ்டாவும் இருக்கும் சார் , கொஞ்சம் சிமெண்ட் போட்டு , அப்போ அப்போ அதுல துப்பி வச்ச மாவுல போட்டது சார்.

5.ஏதாச்சும் திருமணவிழாவுல பார்ர்குற தூரத்து மாமிக , ஏண்டா இவ்ளோ பெரியாளாயிட்டே அடையாளமே தெரியல ?
அதுலா சரி நீங்க என்னமோ சிறிசாயிட்ட மாதிரி பேசுறீங்க..

6.கல்யாண பத்திரிக்கை கொடுக்க வரும் பெண்ணிடம் , என்னடி மாப்ள நல்ல குணமா ?
மாப்பிள்ளை ரெண்டு கொலை , நாலு கற்பழிப்பு , பத்து கொளை பண்ணியிருக்காரம் . பயபுள்ள பயங்கரமா குடிக்குமா . நிறைய பெண்டுக சகவாசம் கூட உண்டாம்.எல்லாம் பணத்துக்காகதான் அவர கட்டிகிறேன்.

7.நைட் ரெண்டு மணிக்கு நல்லா தூங்கிட்டு இருக்கும் போது போன அடிச்சி , என்ன மச்சான் தூங்கிட்டு இருக்கியா ?

இல்ல மாப்ள , ஆப்ரிக்கால உள்ள ஜூலு மக்கள் கல்யாணம் பண்ணுவாங்களானு ஆராய்ச்சி பண்ணிட்டுருக்கேன்.நான் தூங்கிட்டு இருக்கேனு நினைச்சியா , ஏண்டா உனக்கு இப்டி புத்தி வேலை செய்யுது.

8.யாராச்சும் முடி வெட்டிட்டு வந்தா , என்னடா முடி வெட்டிருக்கே போல ?
இல்லடா இலையுதிர் காலம் போல இது முடியுதிர்காலம் அதான் முடி உதிந்திருச்சு.

9.புகை வண்டி விடுகையில் ,நீ ஸ்மோக் பண்ணிவியா ?

அய்யோ இல்லை இது சூழ்ச்சி . நான் சாக்பீஸதான் வாயிலே வச்சிருந்தேன் ,எப்படி புகை வருதுனு தான் தெரியல.

டிஸ்கி:
---------
யாராச்சும் பத்துனு சொல்லிட்டு ஒன்பதுதான் இருக்குனு கேட்டிங்கண்ணா , அந்த கேள்விதான் பத்தாவதுங்கோ

28 comments:

ப்ரியமுடன் வசந்த் said...

அடப்பாவி ச்சூப்பர்மா.....

ச.செந்தில்வேலன் / S.Senthilvelan said...

கலக்கல் டிஸ்கி :))

naadodi ilakkiyan said...

kalakkal post.

டிஸ்கி supero super.

தினேஷ் said...

பிரியமுடன்.........வசந்த்,ச.செந்தில்வேலன் , naadodi ilakkiyan வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

Suresh said...

செம ;)டிஸ்கி மர்ரும் கலக்கல் பதிவு ;) இப்படி கேள்வி கேட்கும் மக்களை பிடிச்சு செம கலாய்.. இனி நாங்க உங்க பின்னாடி அதாங்க பாலோவர் ;) இனி சேர்ந்தே பயனிப்போம் ..

குறை ஒன்றும் இல்லை !!! said...

கலக்கல் டிஸ்கி :))

நானும் வழி மொழிகிறேன்,,

SUREஷ்(பழனியிலிருந்து) said...

இது அது மாதிரி இல்ல இருக்கு....,

Raju said...

அசத்தீட்டீங்க‌ நண்பா...!

krish said...

haa haa super ma

Anbu said...

கலக்கல் டிஸ்கி :))

நானும் வழி மொழிகிறேன்,,

கலையரசன் said...

எங்கயோ படிச்ச மாதிரி இருக்கு...
ஆங்கிலத்தில் வந்தததோ?
அல்லது மீள் பதிவா?

எதுவாயிருநதாலும் சூப்பரப்பு..

தமிழ் அமுதன் said...

5.ஏதாச்சும் திருமணவிழாவுல பார்ர்குற தூரத்து மாமிக , ஏண்டா இவ்ளோ பெரியாளாயிட்டே அடையாளமே தெரியல ?
அதுலா சரி நீங்க என்னமோ சிறிசாயிட்ட மாதிரி பேசுறீங்க.. ha ha ha super

Suresh Kumar said...

நீங்களுமா ? நல்ல கேள்விகள் ஏதாவது கேட்கனும்னா இந்த மாதிரி தான் கேட்க முடியும்

சம்பத் said...

///8.யாராச்சும் முடி வெட்டிட்டு வந்தா , என்னடா முடி வெட்டிருக்கே போல ?
இல்லடா இலையுதிர் காலம் போல இது முடியுதிர்காலம் அதான் முடி உதிந்திருச்சு.///

சூப்பர் ... டிஸ்கி அருமை...

விக்னேஷ்வரி said...

ஹாஹாஹா.... எல்லாமே நல்லாருக்கு. சரியா சொல்லியிருக்கீங்க. கேள்விகள் அழகு. பதில்கள் அதை மிஞ்சும் நகைச்சுவை அழகு.

Beski said...

சூப்பரப்பு.
அண்ணே ரொம்ப அனுபவிச்சிருப்பீங்க போல?

Joe said...

இந்த கோமுட்டித் தலையனுங்க கேள்வி கேட்டே, பல பேரைக் கொலை பண்ணதாலே, சூரியன் கொதிச்செழுந்து அவனுங்களை போட்டு அடிச்சு துவைச்சிட்டாருங்கோ! ;௦-)

நாஞ்சில் நாதம் said...

:))

பீர் | Peer said...

Nice

வால்பையன் said...

ஹா ஹாஹா ஹா

டிஸ்கி அதைவிட சூப்பரு!

ஆர்.வேணுகோபாலன் said...

பதினொண்ணா இன்னொண்ணும் சேர்த்துக்குங்க சார்! ஊருக்குப் போயிருக்கும்போது யாராவது பார்த்திட்டு,’அட, நீ வந்திருக்கியா?’ன்னு கேட்பாங்க! பின்னே என்ன நம்மளோட ஆவியா உலாத்திட்டு இருக்குன்னு கேட்கணும் போலிருக்கும்!

கலக்கல்! நிறைய கேள்வி-பதில் போடுங்க!

Unknown said...

இது நல்லா இருக்கே..! கலக்குங்க..!

सुREஷ் कुMAர் said...

அப்பாடா.. மிக நீண்ட நாட்களின் போராட்டத்துக்கு பிறகு இன்னைக்கு கமெண்ட்ட முடிந்ததில் மகிழ்ச்சி..


ஆனா.. இந்த இடுகைய பத்தி கமென்ட்டுற அளவுக்கு இருந்த பொறுமைதான் போய்டுச்சு..

இன்னொருதபா படிச்சுட்டு கமெண்ட்ட முயற்சிக்கிறேன்..

सुREஷ் कुMAர் said...

//
3.
//
ரசித்தேன்..
சிரித்தேன்..
ரசித்து சிரித்தேன்..

ஹேமா said...

சூரியன் நம்மவங்க நக்கலா கேக்கிறாங்களா நளினமா கேக்கிறாங்களான்னு தெரியாம கேப்பாங்க.அதுவும் அவங்க திறமைதான்.

Anonymous said...

வாய் விட்டுச் சிரித்தேன்... கன்பாமா ரூம் போட்டு யோசிக்கிற பயல் தான் (வடிவேல் ஸ்டையிலில் படிக்கவும்). ஆமா உங்களுக்கு வடிவேல் வீட்டு அட்ரஸ் தெரியுமா. என் சித்தி டார்ச்சர் தாங்க முடியாம, அவங்க பசங்க வடிவேல தேடிட்டு இருக்காங்க. ஏன்னா சித்திக்கு வடிவேல் மேல ரொம்ப பெரிய கிரஸ் இருக்குப்பா.

தராசு said...

பய புள்ளைக வித்தியாசமா யோசிக்கறாய்ங்கப்பா

Jackiesekar said...

சூரியன் சூப்பருப்பா