Wednesday, September 16, 2009

என்னத்த சொல்ல?

காதல் வயப்பட்ட என்னுடைய இரண்டு நெருங்கிய நண்பர்கள் . ஒருத்தன் காதலியால் நல்ல மாப்பிள்ளை கிடைத்ததும் ஏமாற்றப்பட்டான் நான்கு வருட காதல்.இன்னொருவன் 10 வருட காதலை வீட்டில் ஏற்பட்ட பிரச்சனையால் கழட்டிவிட்டு இன்னொருத்தியிடம் காதல் போதையில் திரிகிறான்.காதல்னா என்ன பாஸூ?

-------------------------------------------------------------------------------------------------
பெங்களூர் பதிவர் சந்திப்பு நடத்தலாம்னு ஜோ அண்ணத்தே சொன்னதும் சரினு சொல்லிட்டு. அன்னிக்காச்சும் எப்படியாவது பார்த்திரனும்னு நினைச்சுட்டு இருந்தா அன்னிக்குனு நண்பர்களின் அன்பு தொல்லையால் இண்டர்வீயுவுக்கு போனேன்.பிளான் பண்ண சந்திப்பும் நடக்கல,பிளான் பண்ணி போகாம போன இண்டர்வியுவும் விளங்கல

-------------------------------------------------------------------------------------------------
வெள்ளிக்கிழமை நண்பர்கள் கூட்டம் உபா கடையில் நடத்திகிட்டு இருக்கும் போது ஒருத்தர் தமிழ் பேசுவதை பார்த்துட்டு எந்த ஊர் அப்படினு கேள்விகளை கேட்டு இம்சைய போட ஆரம்பிச்சுட்டாரு.மதுரைனு சொன்னதும்எனக்கு அஞ்சாநெஞ்சனை தெரியும்,அவர் பெங்களூர்க்கு வந்தா என்னை பார்க்காம போகமாட்டாரு, என்ன பிரச்சனைனாலும் என்கிட்ட சொல்லுங்கனு செல் நம்பர் கொடுத்தார் வேற வழியில்லாமல் போனில் நோட் பண்ணுற மாதிரி நடிக்க வேண்டியதா போயிருச்சு.நல்ல வேளையா இன்னொரு அடிமை வந்து நான் சென்னைனு சொன்னதும் நைசா நாங்க கழட ஆரம்பிச்சோம் அப்போ என் காதுல எனக்கு தயாநிதிய....

-------------------------------------------------------------------------------------------------

நேற்று பார்த்த ஜுனியர் சிங்கர்ல சீனியர்கள்(ஆம்) வைச்ச பேருல ஜொள்ளு ஜக்கமா,நிக்காத நித்தியஸ்ரி,ஜிப்பா ஜிகிர்தாண்ட,சரக்கு சரவெடி.. நிறைய பேருக்கு பிளாக் புனை பேர் வைக்க அத பாருங்க..அப்புறம் விஜய் டிவிக்கு யாராச்சும் இந்த டிடி(கொசு) தொல்லை தாங்க முடியல மருந்து அடிச்சு விரட்டுங்கனு சொல்லுங்கப்பா.. முடியல...

21 comments:

வால்பையன் said...

//எனக்கு அஞ்சாநெஞ்சனை தெரியும்,அவர் பெங்களூர்க்கு வந்தா என்னை பார்க்காம போகமாட்டாரு,//

எனக்கு கூடத்தான் ஒபாமாவை தெரியும்!
ஈரோடு வந்தா என்னை பார்க்காம போகமாட்டாரு!

सुREஷ் कुMAர் said...

//
காதல்னா என்ன பாஸூ?
//
எங்களுக்கும் கேள்வி கேக்க மட்டுந்தான் தெரியும்..

सुREஷ் कुMAர் said...

//
பிளான் பண்ணி போகாம இருந்த
இண்டர்வியுவும் விளங்கல
//
போகாம இருந்த இண்டர்வியுவா..
போன இண்டர்வியுவா..

ஏதும் பிழையா அடிச்சிருக்கிங்களா..

सुREஷ் कुMAர் said...

//
வால்பையன் said...

//எனக்கு அஞ்சாநெஞ்சனை தெரியும்,அவர் பெங்களூர்க்கு வந்தா என்னை பார்க்காம போகமாட்டாரு,//

எனக்கு கூடத்தான் ஒபாமாவை தெரியும்!
ஈரோடு வந்தா என்னை பார்க்காம போகமாட்டாரு!
//
ஆமா..

எனக்கு கூடத்தான் வாலு'வ தெரியும்..

அவர் ஈரோட்ல இருப்பதுதெரிஞ்சா அந்த பக்கமே போகமாட்டேன்..
(அப்டிதானே வாலு..)

सुREஷ் कुMAர் said...

கமெண்ட் போடுறதுக்கான முறையை மாத்தினதுக்கு நன்றி.. இப்போ நெம்ப சவுரியமா இருக்கு..

ஆமா.. போன வாரம் மொதோ நாளே ஆட்டோ அனுப்பியும் ஒரு தடவைகூட வலைச்சரம் வரவே இல்லையே..

நையாண்டி நைனா said...

அண்ணன் சூரியன் அவர்கள் எங்கிருந்தாலும், ஒரு குவாட்டரை அடித்து விட்டு பேனா பேப்பரோடு வரவும் வேலை(ளை) வந்திருக்கு...

இரும்புத்திரை அரவிந்த் said...

ஆனா ஒபாமா ஈரோடு வரமாட்டாரு,

சூரியன சுட்டது யாரு - இந்த பதிவ படிச்சதும் இந்த கேள்வி ஞாபகம் வருது

சூரியன் said...

நன்றி வாலண்ணே...

ஒபாமா யாருண்ணே உங்க வகுப்பு தோழரா?

சூரியன் said...

மாப்பு சுரேசு மன்னிச்சுக்க ஆட்டோ அனுப்பியும் வரல ஏன்னா இங்க IT சதி பண்ணிட்டானுக , ஆபிஸ புது இடத்துக்கு மாத்துனதால் நெட்வொர்க் இல்லாமல் போச்சு... மொத்தமா போய் பார்த்தாச்சு..

எதுக்கும் அதை எல்லாம் ஒரு தடவ உங்க பதிவுல ஒரு ரிப்பீட்டு போடுங்க மொத்தமா..

சூரியன் said...

//எங்களுக்கும் கேள்வி கேக்க மட்டுந்தான் தெரியும்//

நீயுமா அப்ப யாருப்பா பதில் சொல்றது..

சூரியன் said...

/போகாம இருந்த இண்டர்வியுவா..
போன இண்டர்வியுவா..//

அடடா தப்பு பண்ணிட்டேனே ,
அது பிளான் பண்ணாம போன இண்டர்வியுவு..

அவ்வ்வ்

சூரியன் said...

//அண்ணன் சூரியன் அவர்கள் எங்கிருந்தாலும், ஒரு குவாட்டரை அடித்து விட்டு பேனா பேப்பரோடு வரவும் //

போயாச்சு வேலையும் முடிச்சாச்சு..
நன்றி

இங்க

விக்னேஷ்வரி said...

காதல்னா அனுபவிக்கனும். ஆராயக் கூடாது. அனுபவிங்க சூரியன் புரியும்.

டெல்லி பதிவர் சந்திப்பு ஆறு மாசமா தள்ளிப் போகுது. நீங்களும் சீக்கிரம் அனைவரையும் சந்திக்க வாழ்த்துக்கள்.

நீங்க மதுரையா...

ஐயோ, டி.வி. பாக்குற ஆசையே போய்டுச்சு, இந்த ஷோக்களால்.

தியாவின் பேனா said...

விக்னேஷ்வரி said... "காதல்னா அனுபவிக்கனும். ஆராயக் கூடாது"

அட இந்த தத்துவம் நல்ல இருக்கே .

mrknaughty said...

நல்லா இருக்கு
thanks
mrknaughty
click here to enjoy the life

இராஜராஜேஸ்வரி said...

பகிர்வுகள் ரசிக்கவைக்கின்றன். பாராட்டுக்கள்.

cheena (சீனா) said...

அன்பின் தினேஷ் - நல்லாத்தா இருக்கு - என்னத்த வேணா சொல்லலாம்ல - காதல்னா தெரியாதா ? அடப் பாவமே ! ஆமா எனக்கும் தெரியாது. சரி சரி - நட்புடன் சீனா