Monday, June 29, 2009

நாடோடிகள்

பசங்க படத்திற்க்கு பிறகு நல்ல படமா வந்திருக்குனு கேபிள் அண்ணன் , நாடோடி அண்ணன் (நாடோடி பற்றி நாடோடி.. ஆஹா) சொன்னாங்கனு நேற்று மதியம் கொஞ்சம் தாகசாந்தி அடைந்து தூக்கலா தூக்கத்த போட்ட என் அறை உடன்பிறப்புகளை உசுப்பி .. அவனுக கிட்ட நல்ல வார்தையில் திட்டு வாங்கி (என்ன நல்ல வார்த்தையில் திட்டானு நீங்க கேக்குறது கேக்குது) ..

பக்கத்துலேயே multiplex Pvr இருந்தாலும் 200 ரூ குடுத்து பார்க்க ரொம்ப யோசிக்க வேண்டி இருக்கே . அதனால புஷ்பாஞ்சலி தியேட்ட்ருக்கு போக முடிவெடுத்து 50 ரூ தான் டிக்கெட் ( மீதி 150 க்கு ஒரு நம்ம பிராண்ட் உற்சாக பானம் அருந்தலாம் பாருங்க அதான் 200 ரூ தியேட்டருக்கு போகாமா இப்படி .. நானெல்லாம் ஊர் திருவிழா அப்போ போடுற திரைப்படத்த விடிய விடிய தெருல உக்கார்ந்து பாக்குற ஆளு .. நமக்கு 50 ரூ டிக்கெட் கொடுத்து பாக்குறதே அதிகம் என்ன சொல்றீங்க ) ..

6 மணி படத்துக்கு அறையில் இருந்து 5.45 கிளம்பி 30 நிமிடம் பேருந்து பயணத்தில் உள்ள தியேட்டருக்கு போனோம் .ஹி ஹி நாமெல்லாம் என்னைக்கு நேரத்துக்கு போனோம் .பேருந்துல போகும்போது நான் கேபிள் அண்ணன் பதிவுல சொல்லியிருக்காரு , நாடோடி அண்ணன் சொல்லியிருக்காரு ,கார்த்திகை பாண்டி அண்ணன் சொல்லியிருக்காரு மற்றும் நம் பதிவர்கள் அனைவரும் சொல்லியிருக்காக படம் நல்லா இருக்குனு சொல்லிட்டு வந்தேன் . ஒருத்தன் மட்டும் எதையும் கேக்காம சிரிச்சிட்டே வந்தான் . என்னாடானு பார்த்தா பய சைக்கிள் கேப்புள படம் ஓட்டிட்டு இருக்கான் கண்கள் இரண்டால் உன் கண்கள்
இரண்டால்னு .. பார்த்துடா அறுத்துர (கழுத்ததான்) போராங்கனு சொன்ன பின்னாடிதான் பயபுள்ள சிரிப்ப நிப்பாட்டுச்சு ..

எல்லாரும் மிகுந்த எதிர்பார்புடன் தியேட்டர் வாசலுக்கு போனா , தியேட்டர்ல எதோ இடிச்சுட்டு கட்றாங்கனு மூடி கிடக்கு . அடங்கொய்யாலே இப்படி ஆயி போச்சுனு பக்கத்துல உள்ள தாக சாந்தி நிலையத்திலே சாந்தி அடைஞ்சிட்டு நாடோடி படம் பார்க்க போயி பாரோடி வந்தோம் ..

டிஸ்கி:
----
அடுத்த வாரம் பார்க்க பிளான் பண்ணியிருக்கோம் . பிளான் பண்ணமா பண்ணக்கூடாதுனு இப்பத்தான் உணர்ந்தேன் ...

நாடோடி படத்தை பத்தி எதிர்பார்த்து இங்க வந்து ஏமாந்த ஹி ஹி ஹி .. காத்திருக்கவும் .. இல்லேனா கேபிள் , நாடோடி அண்ணன தேடி போகவும் ..

8 comments:

நாடோடி இலக்கியன் said...

//இங்க வந்து ஏமாந்த //

:(

namma pakkam vantheengkalaa thambi.

தினேஷ் said...

நன்றி TVR ஜி .. வருகைக்கு..

தினேஷ் said...

// நாடோடி இலக்கியன் said...
//இங்க வந்து ஏமாந்த //

:(

namma pakkam vantheengkalaa thambi. //

ஆமாண்ணே நீங்க எப்ப பதிவ போட்டாலும் பின்னுட்டம் போடுறேனே இல்லையோ படிச்சிடுவேன் .. உங்க நாடோடிய படிச்சிட்டு தான் நாடோடியா தேடி போய் பாரோடி வந்தேன் ..

நாடோடி இலக்கியன் said...

ha ha ha
cable sankar,kaarthikaip paandiyanin pathivai padisirupeengka neththu.

naan innaikkuthaane post potten logic idikkuthe makka.

arasiyalla ithellaam sagajamappaannu thonuthaa.

thanks thambi nammalayum thodanrthu vaasippatharku.

தினேஷ் said...

//naan innaikkuthaane post potten logic idikkuthe makka. ///

ஹி ஹி .. அரசியல்ல இதெல்லாம் சாதாரணம்ங்கோ ..

सुREஷ் कुMAர் said...

//
. நானெல்லாம் ஊர் திருவிழா அப்போ போடுற திரைப்படத்த விடிய விடிய தெருல உக்கார்ந்து பாக்குற ஆளு ..
//
சபாசு.. என் இனமடா நீ..

सुREஷ் कुMAர் said...

//
பய சைக்கிள் கேப்புள படம் ஓட்டிட்டு இருக்கான் கண்கள் இரண்டால் உன் கண்கள்
இரண்டால்னு ..
//
யாரோடனு சொல்லவே இல்லையே பாஸு..

தினேஷ் said...

நன்றி சுரேஷ் ஜி ..

////
பய சைக்கிள் கேப்புள படம் ஓட்டிட்டு இருக்கான் கண்கள் இரண்டால் உன் கண்கள்
இரண்டால்னு ..
//
யாரோடனு சொல்லவே இல்லையே பாஸு.//

சொல்லலேயோ அது ஒரு கன்னடத்து பைங்கிளி ..
கன்னடத்துல பக்கத்துல உள்ள பொண்ணுகிட்ட மாத்தாடிட்டு இருந்துச்சு . அது மட்டும் தான் தெரியும்..மற்றபடி எதும் தெரில எனக்கு ..