Wednesday, April 29, 2009

வாழும் வள்ளல் மக்களின் தொண்டன் ஏழைகளின் பாரி இராமநாதபுரம் மக்களின் வீரத்தளபதி அண்ணனுக்கு ஜெ!


                   யார் எள்ளி நகையாடினாலும் , கேலி செய்தாலும் , எதையும் பொருட்படுத்தாது மக்களுக்காக உழைக்க  இந்த நாடாளுமன்ற தேர்தலில் எங்கள் தொகுதி திமுக வேட்பாளராக களமிறங்கியுள்ள எங்கள்   வீரத்தளபதி ஜெ.கே.ரித்திஷ் (எ) சிவக்குமார் அவர்களின் ஆசியால்   இராமநாதபுரம் மக்களுக்கு கிடைத்த நன்மைகளை பற்றிய ஒரு தேர்தல் நேர சிறப்பு பதிவு.

     முதலில் இராமநாதபுரத்து மக்களை ஒரு நடிகன் தங்கள் ஊரில் இருந்து சென்று இரண்டு வெற்றி படங்களை கொடுத்தார் என பெருமை கொள்ள செய்தார்.மக்கள் இலவசமாக ஒரு திரைப்படத்தை தியேட்டரில் பார்க்க முடியும் என்று நிரூபித்து காட்டினார்.எந்த ஒரு பின்பலம் இல்லாமல் ஆளனபட்ட இரஜினியின் குசேலேனே மண்ணை கவ்விய போது ,தன்னம்பிக்கையுடன் தன்னை கேலி செய்த கோடம்பாக்கத்தை தனது சிறந்த நடிப்பால் நாயகனை தமிழகம் முழுவதும் 100 நாள் ஓடச்செய்தார் .

       மந்திரியே வந்தாலும் குவார்ட்டர் அடித்து குப்புற கிடக்கும் குடிமகன்களை , தன்னுடன் சேர்த்துக்கொண்டு ,இராமநாதபுரம் மாவட்டம் முழுவதும்  இரண்டு வருடங்களுக்கு முன்பே சூராவளி சூற்றுபயணம் சென்று வந்தார். வலை மக்களே நீங்கள் யோசிக்க வேண்டிய ஒன்று , சட்டமன்ற நாடாளுமன்ற உறுப்பினர்களே ஒவ்வொரு ஊராக வலம் வராத பொழுது மக்களை சந்திக்க வேண்டும் என்று ஊர் ஊராக  இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே மக்களை சந்தித்து எந்த ஒரு பிரதிபலன்பாரமல் இல்லை என்று சொன்னவர்க்களுகெல்லாம் அள்ளி அள்ளி கொடுத்தார்.

          இதை தன்னுடைய படமான நாயகனில் இருந்தாக்கா அள்ளி கொடு , தெரிஞ்சாக்கா சொல்லி கொடுன்னு சொல்லி, சொன்னதை செய்தார் . சொல்லாததையும் செய்தார்.

          தமிழரின் வீர விளையாட்டான ஜல்லிகட்டுக்கு நீதிமன்றத்தில் தடை வாங்கிய வீரமில்லா மக்களுக்கு எதிராக வீரமுள்ள தமிழர்க்காக ஜல்லிகட்டு காப்பாற்றும் கழகம் அமைத்து, கழகத்தை தமிழகம் முழுவதும் பரப்பி , இன்று பெருந்திரளான மக்களின் சார்பாக நீதிமன்றத்திலே வழக்காடிகொண்டிருக்கிறார்.

        இருக்கிற அரசியல்வாதிகள் மக்கள் பணத்தை கொள்ளை அடிக்கும் போது தன் பணத்தை மக்களுக்காக எந்த ஒரு பதவியில் இல்லாமாலும் பிரதிபலன்பாராமல் செலவு செய்தார்.

        கடைசியாக என் ஊர் சிறுவர்கள் கிரிகெட் போட்டி நடத்துவதற்க்காக 1000 ரூ கேட்டதற்க்கு புன்னகையோடு 5000 ரூ தந்தார்.மேலும் எங்க ஊர் கோவிலின் வெளிபுர சுவரை கட்டி தருவதாக சொல்லி சென்ற மறுநாளே ,ஒரு லாரி மண்ணை இறக்கி வேலையை ஆரம்பித்து விட்டார்.அரசியல்வாதிகள் பதவியில் இருந்தாலுமே செய்வோம் என்று சொல்லி மறக்கும் காலத்திலே அடுத்தநாளே வேலையை ஆரம்பித்ததை என்னவென்று சொல்வது.

      ஆகவே இதை படிக்கும் இராமாநாதபுர நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட வலை பதிவு மக்களே உங்கள் வாக்குகளை வாழும் வள்ளலுக்கு பதிவு செய்யுங்கள் முடியாதவர்கள் உங்கள் உற்றார் உறவினரை வாக்களிக்க செய்யுங்கள்.
     
     மற்ற மக்கள் வள்ளளை எள்ளி நகையாடுவதை நிறுத்திக்கொள்ளுங்கள்.

நன்றி வால்பையன்.


BJP,Congress,Lokhsabha 2009,Indian parlimentary Election,DMK,JK Rithish

18 comments:

Suresh said...

:-) ஹா ஹா ஹா மச்சான் இது நல்லா இருக்கே வஞ்ச புகழ்ச்சி அணினா இது தானா ;)

/தமிழ் நாட்டின் தென் கோடி கிராமத்தில் மண் வசானையோடு வளர்ந்து தற்போது கணினி வாசத்தோடு நகர(நரக)த்தில் வாழ்ந்து கொண்டிருக்கும் லட்சக்கணக்கான தமிழர்களில் ஒருவன்//

அருமையான வாசகங்கள்

தினேஷ் இராஜேந்திரன் said...

நன்றி சுரேஷ் பின்னுட்டத்துக்கு..

வஞ்ச புகழ்ச்சி இல்லை , இது அவரின் உண்மையான பெருமைகள் ..

விஷ்ணு. said...

வாழ்க ஜே.கே.ரித்தீஸ் என்ற சிவகுமார், வளர்க அவரது புகழ்.

Sundar said...

அவர வச்சி காமெடி கீமடி பண்ணலயே

epowerx said...

ந‌ல்ல‌ ம‌னித‌னாத்தான் தெரிய‌றார். ஆனா, அழ‌கிரிக்கு ந‌ண்ப‌னா இருக்காரே!.

தீப்பெட்டி said...

நிஜமாத்தான் சொல்லுறீங்களா பாஸ்............

Anonymous said...

MP aanathukkappuram ippadiyellam seivaraa?????

Anonymous said...

எல்லாஞ் சரிதான், அண்ணன் எத மனசுல வச்சிக்கிட்டு இப்படியெல்லாம் வாரி விடுறாருன்னு தெரியலியே....

உலவு.காம் (ulavu.com) said...

புத்தம் புதிய தமிழ் திரட்டி உலவு.காம்
தமிழ் வலைபூகள் / தளங்களின் சங்கமம் உலவு.காம்
www.ulavu.com
(ஓட்டுபட்டை வசதயுடன்)
உங்கள் வலைப்பூவை இணைத்து உங்கள் ஆதரவைதருமாறு வேண்டுகிறோம் ....

இவன்
உலவு.காம்

Anonymous said...

yes you're right i heard // iam saikrishna murari from salem

Anonymous said...

ethu vanja pukalchi antru koruvarkal

jafir

தினேஷ் இராஜேந்திரன் said...

@sundar
//அவர வச்சி காமெடி கீமடி பண்ணலயே//
அய்யோ அப்படிலாம் இல்லீங்கண்ணா..
@ epowerx
//ந‌ல்ல‌ ம‌னித‌னாத்தான் தெரிய‌றார். ஆனா, அழ‌கிரிக்கு ந‌ண்ப‌னா இருக்காரே!.//
தென் தமிழகத்திலே கட்சியில் இருக்கணும்னா அவரோட சேர்ரத தவிர வேற வழி இல்லை என்ன பண்றது..
@தீப்பெட்டி
//நிஜமாத்தான் சொல்லுறீங்களா பாஸ்...//
சத்தியாமாக நான் சொல்வதெல்லாம் உண்மை உண்மை..
//MP aanathukkappuram ippadiyellam seivaraa?????//
பார்ப்போம் அதை பற்றி இன்னோரு பதிவ போட்டிறேன்..
//எல்லாஞ் சரிதான், அண்ணன் எத மனசுல வச்சிக்கிட்டு இப்படியெல்லாம் வாரி விடுறாருன்னு தெரியலியே....//
எத நினைச்சா என்ன வாரி விடுறாருல ..

பின்னூட்டமிட்ட தோழர்களுக்கு நன்றி!

kesav said...

Enna ithu chinnapulathanama irrikku.......iyooo iyooo.
APJ,Kamalhassan,Vikram,also from Ramanathapuram Dist.Plz remember.
Oru Paanai soothuikku oru sooru patham.....

kesav said...

Ennai Kodumai saravanan..........haaaa haaa

Anbu said...

adllam sari anbare. Mr.Rithish in aduttha katta muyarchi enna. Avarin nedungaala thittam enna. Avar nadadu oorayum makkalayum munnetta adutha seyal thittam enna..

Anbu
Japan..

Anonymous said...

good

abarnashankar said...

solian kudumi summa aaduma?
abarnashankar

zeal said...

very good nalla comedy