Wednesday, September 2, 2009

நானும் ஒரு கையாலாகாதவன்


என்ன எல்லோருக்கும் தெரியுமா ஏற்கனவே .. இருந்தாலும் நானே ஒத்துக்கொள்கிறேன்.

பல நேரங்களில் என் கையாலாகதனத்தை கண்டு வெட்கி மனத்துயர் உற்றிருந்தாலும் இரண்டு நாட்களுக்கு முன் நடந்தவை என் மனதை வாட்டி எடுக்கிறது.அதன் வெளியேற்றமே இது.

நான் பள்ளியில் படிக்கும் போது நல்லா படித்தாலும் என் நண்பர்கள் வட்டாரம் திமிர் கெத்து சேட்டை படிப்புனா என்ன என்று கேட்ட்கும் பசங்களோடதான்.அவர்கள் நட்பு வகுப்பில் உள்ள மத்த பசங்களை ஓட்டுவதற்கும் ,அடிப்பதற்கும் , பயப்பட வைப்பதற்கும் தேவைபட்டது.முக்கியமா நம்மல நம்ம கூட்டத்த தவிர எவனும் என்னனு கூட கேள்வி கேட்க மாட்டார்கள்.அப்படி ஒரு கும்பல் என்னுடையது நான் மேல்நிலைப்பள்ளியில்
படிக்கும் போது. அதற்காக நான் வருந்தவோ வெட்க்கப்படவோ செய்யவில்லை அப்போது.என்னுடைய பள்ளியில் வன்முறை அடிதடி சாதாரணம் உபயம் மதம் மற்றும் ஜாதி.தினம் ஒரு நாள் சண்டைய பார்க்கலேனா அய்யோ இன்னிக்கு வடை போச்சேனு வருந்திய காலம் உண்டு.

ஒரு தடவை என் நண்பன் ஒருவன் அவனுடை நண்பர்கள் ஐவருடன் சேர்ந்து கீழ்பிரிவு மாணவனின் காலை விறகு கட்டையால் அடித்து உடைத்து அவனை இரண்டு வருடம் நடக்க முடியாமல் செய்தனர் .அப்பொழுதெல்லாம் என் நண்பன்தான் காலை உடைத்து என்று பெருமை(?)யுடன் சொல்லி கொண்டிருந்தேன்.(அவன் இதனால் தீண்டாமை பிரிவு வழக்கு பள்ளி மாற்றம் என பல இன்னல்களை சந்தித்து இன்று நல்ல நிலையில் இருக்கிறான்) . வேறொரு சமயம் என் நண்பன் பால் குடம் எடுத்தான் அவனுடன் சென்றிருக்கும்போது ஏற்பட்ட தகராறில் எங்கள் கூட்டம் விளாசுவதை பார்த்த போலீஸ் எங்கள் அருகில் வந்து விரட்டிய போது மிரண்ட என்னை தன்னருகில் இழுத்த மாலை போட்ட நண்பனால் தப்பித்தேன் இல்லைனா அன்னிக்கு போலீஸ் என் டங்குவாரா அத்திருப்பானுக.என் கூட்டத்தில ஒருத்தன் மாட்டிட்டான் அவன் பாதத்தில் போலிஸ் போட்ட ஒத்தடத்துக்கு ஒரு வாரம் நடக்க முடியாமல் திரிந்தான்.அப்பவும் அந்த அடிதடியா பெருசா சொல்லி கொண்டிருந்தேன் துளி கூட வருத்தம் இல்லாமல்.செங்கலால் இன்னொரு வகுப்பு மாணவனை மண்டைய உடைச்சது,ரோட்டில் சும்மா போன முப்பது வயசு ஆளை கன்னத்தில் பளீர் என்று விட்டது இப்படி சொல்லிக்கொண்டே போகலாம்.ஆனால் ஒன்றில் கூட நான் யாரையும் அடிச்சது இல்லை .சத்தியமாங்க நம்புங்க.வேடிக்கை மட்டுமே பார்த்தேன்.ஆனால் அப்போதெல்லாம் வெட்கப்படாத வயசு இன்று இதையெல்லாம் நினைத்து கூனி குறுக செய்கிறது.

நான் அலுவலகத்திற்க்கு பேருந்தில் செல்லும் போது ஐபாடில் பாட்டு கேட்பது வழக்கம்.அன்றும் அப்படியே. தீடிரென்று ஒருத்தன் என் மேல விழுந்தான் என்னனு பார்த்தா இரண்டு சிறுவர்கள்(1 அல்லது 2 பியூசி மாணவர்கள்) ஒரு இருபத்தைந்து வயது ஆளை குத்து குத்துனு இரண்டு பக்கமும் குத்துறாய்ங்க.அந்த ஆள் கண்ண பிடிச்சுட்டு உக்காந்துட்டார் அப்பவும் அவர்கள் விடலை , டிரைவர் வண்டிய நிப்பாட்டினதும் கண்டக்டர் அவர்கள் மூவரையும் இறங்க சொல்லிட்டார். அப்பொழுதுதான் அந்த ஆளை பார்த்தேன் இரண்டு கண்கள் முழுவதும் இரத்தம் எங்கிருந்து வந்ததுனு தெரியலே மூக்கிலும் இரத்தம் , பேருந்து படிக்கட்டு முழுவதும் இரத்தம்.பஸ்ஸில் இருந்த ஒருவரும் இதை தடுக்கவே இல்லை என்னையும் சேர்த்து.யார் மேல் தப்புனு தெரியல ஆனால் யார் தப்பு செய்திருந்தாலும் அந்த அளவிற்கு அடித்திருக்க கூடாது.சிறுவர்கள் வன்முறையில் ஈடுபடுகிறார்களே என்று அன்றுதான் வருத்தம் அடைந்தேன் . மேலும் சண்டை நடந்ததை வேடிக்கை பார்த்துவிட்டு அய்யோ இவ்ளோ ரத்தமா என்று நினைக்க மட்டும் செய்துவிட்டு அடிபட்டவரை மருத்துவமனைக்கோ அல்லது அவர்கள் அடிக்கும் போது தடுப்பதற்கோ எள்ளலவும் முயற்சிக்காத நான் கையாலாகவதன் தானே.

டிஸ்கி:
--------
போன வாரம் கூட ஒருத்தன் மச்சான் நம்மட்ட சண்டை போட புதுக்கோட்டைல இருந்து ஸ்கார்ப்பியோல வந்த நாலு பேரை புரட்டி எடுத்து,வண்டிய நொறுக்கி ஓட ஓட விரட்டினோம்ல என்று சொன்னபோது மச்சான் பெருமையா இருக்குனு சொன்னேன்.

8 comments:

ராஜு.. said...

உண்மைதான் தல்.
:(

வால்பையன் said...

சில இடங்களில் நமக்கு மனிததன்மை மறைந்து மரத்தன்மை வந்து விடுகிறது!

நர்சிம் said...

நல்லா எழுதி இருக்கீங்க சூரியன்.

மயூரேசன் said...

நல்ல பதிவு ஒன்று. தனிப்பட்ட முறையில் நான் ஒரு அமைதியான மானவனாக பல்கலையிலும் சரி பாடசாலையிலும் சரி இருந்தேன். ஆனால் இப்படியான வன்முறை அடிதடி வகுப்பு பெட்டைகளை சேட்டை செய்தல் போன்ற காரியங்களில் ஈடுபடும் மாணவர்களும் இருக்கத்தான் செய்தார்கள். எங்காவது எப்போதாவது ஏன் என்று எதிர்த்து கேட்டதுண்டு ஆனால் பல இடங்களிலும் அப்படியே விட்டுச் சென்றதுதான் உண்மை.

குடுகுடுப்பை said...

நல்ல பதிவு சூரியனார்.

கனககோபி said...

தலைப்பைப் பார்த்ததும் 'அட.. நம்ம ஆளு' என்ற உணர்ச்சிப் பிரவாகத்தில் ஓடி வந்துவிட்டேன்...

தமிழ் முல்லை said...

தமிழகத்திற்கு இழைக்கப்பட்ட அநீதி..!

முல்லை பெரியாறும் .. துரோகத்தின் வரலாறும்...!!

வாருங்கள் வந்து துரோகத்தை அறிந்து கொள்ளுங்கள் ...!!!

நையாண்டி நைனா said...

Really we all are "கையாலாகாதவர்கள்"