Thursday, August 27, 2009

என்னத்த சொல்ல?

இரண்டு வாரங்களுக்கு முன்பு திருப்பதி சென்று வந்தேன் , பெங்களூர்ல இருந்து டிரெயின்ல கிளம்புனது முதல் பாக்குற அத்தனை பேரும் முகமூடி கொள்ளையர்கள் மாதிரி முகமூடிய போட்டு பயமுறுத்திக்கிட்டே வந்தாங்க. திருப்பதி போனாலும் நிக்கிற போலிஸ் ,சீட்டு கொடுக்குற அலுவலர் ,ரூம் ஒதுக்குற பணியாளர் , க்யூல பக்கத்துல நிக்கிறவர் முதல் பூசாரி வரை முகமூடி மயம்தான்.. பாவம் ஏழுமலையானுக்கு மட்டும் மாட்ட மறந்துட்டாங்க..

ஒரு வேளை ஏழுமலையான் அவரே பார்த்துக்குவாருனு விட்டுட்டாங்களோ ?

இந்த பன்னித் தொல்லை தாங்க முடியல ராமா.....

-------------------------------------------------------------------------------------------------------------------------------------

போன வாரம் உறவினரின் திருமணத்திற்க்காக முதல் நாள் இரவு மஹாலுக்கு செல்லும் வழியில் ஹைவே பேட்ரல் என்னை நிறுத்தினார்கள்.லைசென்ஸ் ,பைக் புக் இரண்டும் இல்லை என்னிடம்.அவர்கள் எடு என்று சொன்னதும் இல்லை என்று சொல்லிவிட்டேன்.ஊர் பேரு என்ன பண்றனு கேட்டதும் பெங்களூர்ல வேலை பாக்குறேன் கம்ப்யூட்டர் பொட்டி தட்டுறேனு சொன்னதும்.உன்மேல கேச போட்டு எங்க போய் தேடுறதுனு ஐயாவ போயி பாருனு இன்ஸ்கிட்டே அனுப்புனாங்க.இன்ஸ் சாருக்கும் அதே பதில சொல்லிட்டு கல்யாணத்துக்கா வண்டி எடுக்க வேண்டியாதாயிருச்சு இல்லேனா பைக்ல வந்திருக்கமாட்டேன் சார்னு சொன்னேன்.பக்கத்துல உள்ள ஏட்டு ஐயா எவ்ளோ வாங்கனு காத கடிச்சிட்டு இருக்கும் போதே போ தம்பினு இன்ஸ் பெரிய மனசோட அனுப்பி வச்சார்.நான் எப்போ செஞ்ச புண்ணியமோ முதல் நாள் நைட்டு அடிச்ச கிர்றாலே அன்னிக்கு உள்ள உபா ஏத்தல..

காசு வாங்கமா போலீஸ் விட்டுட்டாங்க அவ்ளோ நல்லவங்களாயிட்டாங்களா ?

அப்புறம் திரும்பவும் அன்னிக்கு மகாலுக்கு போய் சேரும் முன் வேறொரு இடத்துலயும் ஊத சொல்லிட்டு லைசென்ஸ் இல்லேனாலும் போக சொல்லிட்டாங்க..

ஒரு வேளை லைசென்ஸ் தேவை இல்லையோ இனி?

எது எப்படியோ எனக்கு பைசா மிச்சம்..
---------------------------------------------------------------------------------------------------------------------------------

ரெண்டு நாளைக்கு முந்தி வேலுபிரபாவின் காதல்கதை பார்த்தேன் .. சரியான தலைப்பு தேர்வு செய்திருக்கிறார்கள் படத்துக்கு.. அத்தனை காதல் கதைகள் அதும் வெரைட்டியான காதல கதைகள் , இளவயசு காதல்,நல்ல காதல், கலப்பு காதல்,காம காதல்,பெருசு காதல் ,கள்ள காதல்,பெருசு-சிருசு காதல் அத்தனை காதலும் ஒரே படத்தில்..

நல்லாத்தானே இருக்கு படத்துக்குள்ளே படம், என்ன கொஞ்சம் ஹாலிவுட் ரேஞ்சுக்கு யோசிச்சுபுட்டாப்புலய அதான் இங்கே ஓடலேனு நினைக்குறேன்..

---------------------------------------------------------------------------------------------------------------------------------

5 comments:

gnani said...

நல்ல படங்கள் வரவேண்டுமென்று எங்களைப் போல உங்களுக்கும் ஆசை உண்டா? அப்படியானால் தொடர்ந்து படியுங்கள்....

நம்மில் பலர் நல்ல படங்களுக்கு ஏங்குகிறோம். நம் வாழ்க்கையை மேலும் அர்த்தமுள்ளதாக்கும் கதைகள் எவ்வளவோ உண்டே, அவையெல்லாம் ஏன் படமாவதில்லை என்று ஏங்குகிறோம். அப்படிப்பட்ட கதைகள் ஏராளமாகத் தமிழிலும் பிற மொழிகளிலும் இருந்தாலும், அவற்றைப் படமாக்க ஏற்ற வணிகச் சூழல் இங்கே இல்லை.

எனவே அதற்கு வெளியில் ஒரு மாற்றுச் சூழலை உருவாக்கக் களம் இறங்கியிருக்கும் கோலம் இயக்கம், வருடத்துக்கு மூன்று முதல் ஐந்து முழு நீள வீடியோ படங்களைத் தயாரிக்க விரும்புகிறது. இது சாத்தியம்தானா ? நல்ல படங்கள் வரவேண்டுமென்று ஆசைப்படும் ஆயிரக்கணக்கானவர்கள் ஒவ்வொருவரும் தங்கள் பங்களிப்பைப் படம் வருவதற்கு முன்பே அளித்தால் சாத்தியம்.

நீங்கள் செய்ய வேண்டியது என்ன ? முதல் படத்தின் டி.வி.டிக்கான முன்பதிவு தொகையாக ஐநூறு ரூபாய்களை செப்டம்பர் 15, 2009க்கு முன்னதாக எமக்கு அனுப்பவேண்டும். அக்டோபரில்¢ படப்பிடிப்பைத் தொடங்குவோம். நவம்பரில் படம் முழுமையாகி அதன் ஒரிஜினல் டி.வி.டி உங்கள் வீட்டுக்கு நேரடியாக வந்து சேரும்.

இதே போல மூன்று மாதங்களுக்கு ஒரு முறை சில ஆயிரம் பேர் ஆளுக்கு ஐநூறு ரூபாய் அனுப்பி டி.வி.டி முன்பதிவு செய்தால்..... தொடர்ந்து தமிழிலும் பிற மொழிகளிலும் உள்ள நல்ல நாவல்கள், சிறுகதைகள், இன்றைய சமூகத் தேவைக்கு உகந்த படைப்புகள், அவற்றை உருவாக்கக் கூடிய புதுப் புது படைப்பாளிகள், கலைஞர்கள் நம் வீட்டுக்குள்ளேயே வந்து டி.வி.டிகளாக நம்மை சந்திப்பார்கள். படைப்¢பாளியும¢ பார்¢வையாளரும¢ நேரடியாக உறவு கொள்¢ளும¢ இயக்¢கமே கோலம்¢. எண்¢ணற்¢ற புள்¢ளிகளாக பார்¢வையாளர்¢கள்¢ இருக்கிறார¢கள்¢. இந்¢தப்¢ புள்¢ளிகளை இணைத்¢து ஒரு கோலம்¢ வரையும்¢ படைப்¢பாளிகளின் அமைப¢பு கோலம்¢.

இந்த முயற்சியைப் பற்றி உங்கள் ஒவ்வொரு நண்பருக்கும் சொல்லுங்கள். ஒவ்வொருவரையும் முன்பதிவு செய்து இந்தக் கனவு மெய்ப்பட, உதவச் சொல்லுங்கள். முக்கியமானது காலத்தே செய்யும் உதவி. எனவே செப்டம்பர் 15க்குள்¢ முதல் படத்துக்கான உங்கள் முன்பதிவுத் தொகைகள் எம்மை வந்து பிரமிக்கச் செய்யட்டும்.

ஊர் கூடி தேர் இழுப்போம்.

எப்படி பணம் அனுப்புவது ?

முன்பதிவுத் தொகையை (இந்தியாவுக்குள்: ரூ 500/-& வெளிநாடுகள்: அமெரிக்க டாலர் 15) கேட்போலைகள், காசுக்கட்டளை அஞ்சல்கள் அனைத்தும் ‘கோலம்’ பெயரிட்டு அனுப்ப வேண்டிய முகவரி: கோலம். மே/பா, ஞாநி 39 அழகிரிசாமி சாலை, கலைஞர் கருணாநிதி நகர், சென்னை 600078. செல்பேசி: 94440 24947. நேரடியாக கோலம், a/c no. 007705013590 ICICI K.K.Nagar branch என்ற வங்கிக்கணக்கிலும் பணம் செலுத்தலாம். பதிவு செய்யும்போது உங்கள் பெயர், வயது, பாலினம், தொழில், முகவரி, தொலைபேசி, செல்பேசி, மின்னஞ்சல, முதலிய விவரங்களை எங்களுக்குத் தவறாமல் தெரிவியுங்கள்.

Raju said...

என்னத்த சொல்லன்னுட்டு எல்லாத்தையு சொல்லிட்டயே மக்கா..!
நானும் நேத்து நைட்டு அந்த படத்தப் பார்த்தேனே...!
:)

Joe said...

//
இந்த பன்னித் தொல்லை தாங்க முடியல ராமா.....
//
LOL :-D

வால்பையன் said...

லைசன்ஸ் இல்லாம ரெண்டு இடத்துல தப்பிச்சிருக்கிங்க!
எப்போ ட்ரீட்!?

ச.பிரேம்குமார் said...

என்னது? பொட்டி தட்டுற ஆளுன்னு சொல்லியுமா உங்கள சும்மா விட்டாங்க? மிக பெரும் ஆச்சரியம் தான்!!