உடன்பிறப்பே! நான் நீ என்று சொன்னால் உதடுகள் ஒட்டாது, "பெவிக்குவிக்" ஒன்றை வாங்கி ஒட்டினால் வாயே ஒட்டிக்கொள்ளும்.உணக்கு இதைக் கேட்டு சிரிப்பு வருகிறது.ஆனால் இங்கே என் நிலையோ சிரிப்பாய் சிரிக்கிறது. மொத்தம் உள்ளதே 40 சீட்டு தான்.ஆனால் அதை 4000 பேர் பிரித்துக்கேட்கிறார்கள். நான் என்ன செய்ய?,தொகுதிப் பங்கீட்டு பேச்சுவார்த்தை என்ற பெயரில் உள்ளே நுழைகின்றவர்களுக்கு டீயும்,சமோசாவும் வாங்கிக் கொடுத்தே நான் இவ்வளவு காலமும் வாயக்கட்டி வயித்தக் கட்டி சம்பாதித்த காசுகள் எல்லாம் கரைந்து விடும் போலைருக்கிறது. வெறும் விசிட்டிங்கார்டு வைத்திருப்பவர்களெல்லாம் அறிவாலய செக்யூரிட்டியிடம் 50 ரூவாயைத் தள்ளிவிட்டு விட்டு பேச்சிவார்த்தை என்ற பெயரிலே உள்ளே நுழைந்து என் பெண்டை நிமித்தி விடுகிறார்கள். நான் யாரைத் தடுப்பேன். தடுக்கக் கூடிய நேரமா இது?.
என்னவோ! என் பெருமைக்குரிய தமிழக மக்களிடம் இருக்கும் ஞாபக மறதியை நம்பி இந்தத் தேர்தலிலும் மீண்டும் திராவிட முன்னேற்றக் கழகம் போட்டியிடுகிறது. மக்களே! நான் சட்டமன்றத் தேர்தலில் என்னென்ன வாக்குறுதி அளித்தேனோ அதையெல்லாம் அடுத்த சட்டமன்ற எலக்சன் அறிவிக்கும் வரை அமுல்படுத்தக் கடமைப்பட்டுள்ளேன்.அது மட்டுமின்றி வரப்போகிற எலக்சனுக்காக வேண்டி மேலும் சில இலவச திட்டங்களைப் பட்டியலிடுகிறேன்.இந்த இலவசங்களைப் பார்த்து வழக்கம் போல வாயைப் பிளந்தவாறு உதயசூரியனில் விரல்களைப் பதித்துவிடுங்கள். இந்த எலக்சன் மதுரைக்கு மட்டும் நடக்க இருந்தால் நான் உங்களை இவ்வாறெல்லாம் கேட்க மாட்டேன். காரணம் அங்கே நீங்கள் எந்த சின்னத்தில் உங்கள் விரலை வைத்தாலும் அது சூரியனையே சுத்திவரும். என்ன செய்ய என் கண்மணிகளே! என்னிடம் 40 அஞ்சா நெஞ்சர்கள் இல்லயே, இருந்திருந்தால் நான் இது போன்ற ஒரு மொக்கை கடிதத்தை என் விரல் கடுக்க வடித்திருக்க மாட்டேன் என் செல்வங்களே!
கிடப்பது கிடக்கட்டும் கிளவியைத்தூக்கி மணையில் வை என்ற கதையாக, நாடு எப்படி போனால் என்ன என்று முடிவு செய்தவனாக என் இலவசங்களைப் பட்டியலிடுகிறேன்,பாய்ந்து வந்து பிடித்துக்கொள்ளுங்கள்.
1) இதுவரை ரேசன் கடைகளில் வழங்கப்பட்ட அரிசிக்கு பதிலாக சுடச்சுட சோரும்,சுரும்பு கருவாட்டுக் குழம்பும் வழங்கப்படும்.இதனால் ஏற்கணவே வீடுகளில் சமைக்காமல் இலவச கலைஞர் டிவியே கதி என்று கிடக்கும் 2 கோடிதாய்மார்கள் பயன்பெறுவார்கள்.
2) தமிழ்நாடு ரேசன் அரிசி கடத்துவோர் சங்கம், தங்களுக்கு லாரி வாடகை கட்டஇயலவில்லை என்ற கோக்கை முன்வைத்து நடத்திய பேரணி ஆர்ப்பாட்டம் கணிவோடு பரீசீலிக்கப்பட்டு ரேசன் அரிசி கிலோ 1 ரூபாயில் இருந்து 0.50பைசாவாகக் குறைக்கப்படும்.இதன் மூலம் 80,000 ரேசன் அரிசி கடத்துவோர் பயனடைவார்கள்.
3) ஏழை விவசாயிகள் இன்னும் கூட வெறும் கோவணமே கட்டும் அவல
நிலையைக் கருத்தில் கொண்டு அவர்களுக்கு இலவச ஜட்டி வழங்க ஆவண செய்யப்படும்.அதுமட்டுமின்றி இனிமேல் தமிழகத்தில் கோவணம் கட்டுவது தடைசெய்யப்படும். இனிமேல் தங்கர்பச்சான் போன்றவர்கள் அரசு ஜட்டிகளையே பயன்படுத்திக் கொள்ளலாம்.
4) ஏற்கனவே கூத்தாடும் குடிமகன்களுக்கு குஜால் செய்தியாக, டாஸ்மாக் விற்பனையை அதிகரிக்க, இனிமேல் குவாட்டருடன் கொண்டக்கடலையும் வாட்டர்பாக்கெட்டும், ஆஃபுடன் அவித்தமுட்டையும் அங்குவிலாஸ் சோடாவும் இலவசமாக வழங்கப்படும். இதன் மூலம் 3 கோடி டாஸ்மாக் கண்மணிகள் பயனடைவார்கள்.
5) பேரணி ஆர்ப்பாட்டம் நடத்துபவர்களுக்கு இனிமேல் போக்குவரத்து செலவை அரசே ஏற்றுக்கொள்ளும். அதுமட்டுமின்றி இனிமேல் எனக்கு அதிக பாராட்டு விழா எடுப்பவர்களுக்கு தமிழக அரசின் கலைமாமணி விருதும் வழங்கப்படும்.
6) 10 வகுப்பு முடித்த அனைத்து மாணவச் செல்வங்களுக்கும் அண்ணா பல்கலைக்கழகம் வழங்கும் எஞ்சினியரிங் சர்டிபிகேட் இனிமேல் இலவசமாக வழங்கப்படும்.
7) இளம் காதலர்களுக்கு BSNL மூலம் மாதம் தோறும் 50 ரூபாய் இலவச டாக் டைம் வழங்க ஆவண செய்யப்படும்.
8) நல்லா இருந்த மின்சாரத்தை வெட்டி வெட்டி விளையாடிய ஆற்காடு வீராசாமியால் தத்தளிக்கும் தமிழக குடும்பங்களுக்கு இலவச தீப்பந்தம் வழங்க ஆவண செய்யப்படும். அது மட்டுமின்றி தற்சமயம் ஆற்காட்டார் எங்கு,எது எரிந்தாலும் அதை உடனே சென்று அணைத்துவிடுகிறார்.
1 comment:
ஹா ஹா ஹா......
Post a Comment