Wednesday, April 29, 2009

வாழும் வள்ளல் மக்களின் தொண்டன் ஏழைகளின் பாரி இராமநாதபுரம் மக்களின் வீரத்தளபதி அண்ணனுக்கு ஜெ!


                   யார் எள்ளி நகையாடினாலும் , கேலி செய்தாலும் , எதையும் பொருட்படுத்தாது மக்களுக்காக உழைக்க  இந்த நாடாளுமன்ற தேர்தலில் எங்கள் தொகுதி திமுக வேட்பாளராக களமிறங்கியுள்ள எங்கள்   வீரத்தளபதி ஜெ.கே.ரித்திஷ் (எ) சிவக்குமார் அவர்களின் ஆசியால்   இராமநாதபுரம் மக்களுக்கு கிடைத்த நன்மைகளை பற்றிய ஒரு தேர்தல் நேர சிறப்பு பதிவு.

     முதலில் இராமநாதபுரத்து மக்களை ஒரு நடிகன் தங்கள் ஊரில் இருந்து சென்று இரண்டு வெற்றி படங்களை கொடுத்தார் என பெருமை கொள்ள செய்தார்.மக்கள் இலவசமாக ஒரு திரைப்படத்தை தியேட்டரில் பார்க்க முடியும் என்று நிரூபித்து காட்டினார்.எந்த ஒரு பின்பலம் இல்லாமல் ஆளனபட்ட இரஜினியின் குசேலேனே மண்ணை கவ்விய போது ,தன்னம்பிக்கையுடன் தன்னை கேலி செய்த கோடம்பாக்கத்தை தனது சிறந்த நடிப்பால் நாயகனை தமிழகம் முழுவதும் 100 நாள் ஓடச்செய்தார் .

       மந்திரியே வந்தாலும் குவார்ட்டர் அடித்து குப்புற கிடக்கும் குடிமகன்களை , தன்னுடன் சேர்த்துக்கொண்டு ,இராமநாதபுரம் மாவட்டம் முழுவதும்  இரண்டு வருடங்களுக்கு முன்பே சூராவளி சூற்றுபயணம் சென்று வந்தார். வலை மக்களே நீங்கள் யோசிக்க வேண்டிய ஒன்று , சட்டமன்ற நாடாளுமன்ற உறுப்பினர்களே ஒவ்வொரு ஊராக வலம் வராத பொழுது மக்களை சந்திக்க வேண்டும் என்று ஊர் ஊராக  இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே மக்களை சந்தித்து எந்த ஒரு பிரதிபலன்பாரமல் இல்லை என்று சொன்னவர்க்களுகெல்லாம் அள்ளி அள்ளி கொடுத்தார்.

          இதை தன்னுடைய படமான நாயகனில் இருந்தாக்கா அள்ளி கொடு , தெரிஞ்சாக்கா சொல்லி கொடுன்னு சொல்லி, சொன்னதை செய்தார் . சொல்லாததையும் செய்தார்.

          தமிழரின் வீர விளையாட்டான ஜல்லிகட்டுக்கு நீதிமன்றத்தில் தடை வாங்கிய வீரமில்லா மக்களுக்கு எதிராக வீரமுள்ள தமிழர்க்காக ஜல்லிகட்டு காப்பாற்றும் கழகம் அமைத்து, கழகத்தை தமிழகம் முழுவதும் பரப்பி , இன்று பெருந்திரளான மக்களின் சார்பாக நீதிமன்றத்திலே வழக்காடிகொண்டிருக்கிறார்.

        இருக்கிற அரசியல்வாதிகள் மக்கள் பணத்தை கொள்ளை அடிக்கும் போது தன் பணத்தை மக்களுக்காக எந்த ஒரு பதவியில் இல்லாமாலும் பிரதிபலன்பாராமல் செலவு செய்தார்.

        கடைசியாக என் ஊர் சிறுவர்கள் கிரிகெட் போட்டி நடத்துவதற்க்காக 1000 ரூ கேட்டதற்க்கு புன்னகையோடு 5000 ரூ தந்தார்.மேலும் எங்க ஊர் கோவிலின் வெளிபுர சுவரை கட்டி தருவதாக சொல்லி சென்ற மறுநாளே ,ஒரு லாரி மண்ணை இறக்கி வேலையை ஆரம்பித்து விட்டார்.அரசியல்வாதிகள் பதவியில் இருந்தாலுமே செய்வோம் என்று சொல்லி மறக்கும் காலத்திலே அடுத்தநாளே வேலையை ஆரம்பித்ததை என்னவென்று சொல்வது.

      ஆகவே இதை படிக்கும் இராமாநாதபுர நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட வலை பதிவு மக்களே உங்கள் வாக்குகளை வாழும் வள்ளலுக்கு பதிவு செய்யுங்கள் முடியாதவர்கள் உங்கள் உற்றார் உறவினரை வாக்களிக்க செய்யுங்கள்.
     
     மற்ற மக்கள் வள்ளளை எள்ளி நகையாடுவதை நிறுத்திக்கொள்ளுங்கள்.

நன்றி வால்பையன்.


BJP,Congress,Lokhsabha 2009,Indian parlimentary Election,DMK,JK Rithish

Tuesday, April 21, 2009

ஒளி படைத்த கண்ணினாய் வா... வா... வா! உறுதி கொண்ட நெஞ்சினாய் வா... வா... வா!


அரசியலை சாக்கடை என்று சொல்லி படித்தவர்களும், பண்புள்ளவர்களும் ஒதுங்கிப் போனால், அதை யார்தான் சுத்தம் செய்வது?' என்று சினிமாவில் வசனம் பேசுகிற பல ஹீரோக்கள்... நிஜ வாழ்கையில் ஓட்டுப் போடுவதோடு தங்கள் ஜனநாயக் கடமையை முடித்துக் கொள்கிறார்கள். படித்தவர்களும் பண்புள்ளவர்களும்கூட இந்த சாக்கடைக்கு பயந்து ஒதுங்கிக் கொள்வதால் ரவுடிகளும், கட்டை பஞ்சாயத்து ஆசாமிகளும் இன்று அரசியலை தம் உள்ளங்கைகளுக்குள் வைத்திருக்கிறார்கள். இந்த நிலையில், 'சாக்கடையை சுத்தம் பண்ண நான் ரெடி' என காலெடுத்து வைத்திருக்கிறார் 29 வயதே ஆன சரத்பாபு. பிரியாணி, குவார்ட்டர் பாட்டில் என முகம் மாறிப் போயிருக்கும் இன்றைய அரசியலில், அறிவையும் உழைப்பையும் கேடயமாகக்கொண்டு தென்சென்னை தொகுதியில் சுயேச்சையாக போட்டியிடுகிறார் சரத்பாபு.

நிர்வாக இயல் படிப்புக்கு பெயர் பெற்ற அகமதாபாத் ஐ.ஐ.எம்-மில் (இந்தியன் இன்ஸ்டிட்யூட் ஆஃப் மேனேஜ்மென்ட்) எம்.பி.ஏ. பட்டம் பெற்ற சரத்பாபு, புகழ் பெற்ற 'பிட்ஸ்-பிலானியில்' இன்ஜினீயரிங் பட்டமும் வாங்கியவர். ஐ.ஐ.எம்-மிலும், பிட்ஸ்-பிலானியிலும் படித்த அத்தனை பேரிடம் இல்லாத ஒரு கூடுதல் 'தகுதி' சரத்பாபுவுக்கு உண்டு. ஆம். சரத்பாபு மடிப்பாக்கத்தில் ஒரு குடிசையில் பிறந்தவர்! அவருடைய அம்மா மடிப்பாக்கத்தில் தெருவோரம் சிறு இட்லி கடை நடத்தியவர். அதன்மூலம் கிடைத்த வருமானத்தில்தான் இத்தனை பட்டங்களையும் பெற்றார் சரத்பாபு. பட்டங்கள் மட்டுமா?

இந்திய அளவில் இளைஞர்களின் போற்றுதலுக்குரிய அடையாளம் என்ற புகழ்ச்சி மிக்க 'யூத் ஐகான்' விருதும் பெற்றவர் சரத்பாபு. ஐ.ஐ.எம்-மில் படித்தவர்களெல்லாம் பல லட்சம் மாத சம்பளத்தில் புகழ்பெற்ற நிறுவனங்களில் உயர் பதவிகளில் செட்டில் ஆவது வழக்கமாக இருக்க... சரத்பாபு எடுத்தது மாறுபட்ட முடிவு. பொதுவாக ரிப்பன் வெட்டும் எந்த நிகழ்ச்சிக்கும் போகாத இன்ஃபோசிஸ் நாராயணமூர்த்தி, சரத்பாபு முதல் முதலாக காலேஜ் ஒன்றில் கேன்டீன் துவங்கியபோது அதன் துவக்க விழாவுக்கு வந்து இவரை உற்சாகப்படுத்தினார்.

இத்தனை தகுதிகள் இருந்தாலும், இதோ சாந்தமாக தென்சென்னை தொகுதியில் வலம் வந்துகொண்டிருக்கிறார் சரத். பிரசாரம் முடித்த ஒரு மாலைப் பொழுதில், அவருடைய ராயப்பேட்டை அலுவலகத்தில் அவரை சந்தித்தோம்.

ஒரு டிபிக்கல் அரசியல் கட்சி அலுவலகம் போல் இல்லாமல், ஒரு காலேஜ் காம்பஸ் மாதிரி இருந்தது அலுவலகம். கம்ப்யூட்டரில் வாக்காளர் பெயர் பட்டியலை பார்த்து விவாதித்தபடி, தென்சென்னை வரைபடத்தை டேபிளில் விரித்து வைத்து, நண்பர்களுடன் திட்டமிட்டுக் கொண்டிருந்தார். அந்த வேலைகளுக்கிடையே நம்மிடம் பேசினார் சரத்பாபு.

"என்னோட சின்ன வயசில எங்க அம்மா சாப்பாடு வேணாம்டானு சொல்லிட்டு, அடிக்கடி தண்ணி குடிச்சுக்கிட்டே இருப்பாங்க. 'தண்ணின்னா அம்மாவுக்கு ரொம்ப பிடிக்கும் போலிருக்கு'னு சின்னப் பையன் நானும் நினைச்சுட்டு இருந்தேன். அப்புறம்தான் தெரிஞ்சது, இட்லி கடையில் கிடைக்கிற வருமானத்தை வச்சு அம்மா, நான், ரெண்டு அக்கா, ரெண்டு தம்பினு ஆறு பேர் எப்படி சாப்பிட முடியும்? அதான் எங்க அம்மா தண்ணீரை குடிச்சே வயித்தை நிறைச்சுட்டு இருக்காங்க.

ஆனாலும் என் வயித்துக்கும், அறிவுக்கும் பட்டினி போடாம நல்லா படிக்க வச்சாங்க. படித்து முடிச்சதும் பல லட்ச ரூபாய் சம்பளத்துக்கு உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் நல்ல வேலை வாய்ப்புகள் வந்துச்சு. எனக்கு அதெல்லாம் பெரிசா தெரியலை. எங்க குடும்பம் பட்டிருந்த கடனை அடைக்க ஒரு கம்பெனியில் கொஞ்ச நாள் வேலை செய்தேன். பிறகு, அம்மா நடத்தி வந்த அதே இட்லி கடையை நடத்த ஆரம்பிச்சேன். தாய் எட்டடி பாய்ஞ்சா, குட்டி பதினாறு அடி பாய்ஞ்சு ஆகணுமில்லையா? அதனால கடைய கொஞ்சம் பெரிசா ஆரம்பிச்சேன். சென்னை, கோவா, பிலானி, ஹைதராபாத்னு பல ஊர்கள்ல இருக்கும் பல பல்கலைக்கழக கேன்டீன்களை இப்ப நடத்திக்கிட்டு இருக்கேன். வருஷத்துக்கு ஏழு கோடி ரூபாய் புழங்கும் இந்த பிசினஸ் மூலமா சுமார் 250 பேருக்கு வேலையும் கொடுத்திருக்கேன்.

பணம் எந்த விதத்துலயும் என்னை மாத்திடலை. முன்ன இருந்த அதே மடிப்பாக்கம் ஏரியா வீட்லதான் இப்பவும் இருக்கேன். சின்னப் புள்ளையில இருந்து பாத்துப் பழகின மாமா பொண்ணைத்தான் கட்டிக்கிட்டேன். நான் டாக்டர் கிடையாது. ஆனா, ஸ்கூலுக்கு போற ஒரு பையனை பார்த்தாலே அவன் சாப்பிட்டிருக்கானா இல்லையான்னு கண்டுபிடிச்சுடுவேன். கண்டுபிடிச்சு என்ன பிரயோஜனம். அவன் சாப்பிட ஏதாவது வழி செய்யணுமில்லையா..? அதனாலதான் தென்சென்னை வேட்பாளரா போட்டி போடறேன். நான் போட்டி போடறேன்னு கேள்விப்பட்டதுமே, எனக்கு அறிமுகம் இல்லாதவங்ககூட என்னோட சேர்ந்து எனக்காக வாக்கு சேகரிக்கிறாங்க. அரசியல்னாலே ஒதுங்கிப் போறவங்களை, குறிப்பா இளைஞர்களை அரசியலுக்குக் கொண்டுவந்து அதை சேவை செய்கிற தளமா மாத்தணும். அதுதான் என்னோட ஒரே திட்டம்!" என நெஞ்சை நிமிர்த்துகிறார் சரத்பாபு.

என்ன சொல்ல..?

ஒளி படைத்த கண்ணினாய் வா... வா... வா! உறுதி கொண்ட நெஞ்சினாய் வா... வா... வா!

Wednesday, April 8, 2009

மு.க தேர்தல் அறிக்கை 2009

உடன்பிறப்பேநான் நீ என்று சொன்னால் உதடுகள் ஒட்டாது, "பெவிக்குவிக்ஒன்றை வாங்கி ஒட்டினால் வாயே ஒட்டிக்கொள்ளும்.உணக்கு இதைக் கேட்டு சிரிப்பு வருகிறது.ஆனால் இங்கே என் நிலையோ சிரிப்பாய் சிரிக்கிறது. மொத்தம் உள்ளதே 40 சீட்டு தான்.ஆனால் அதை 4000 பேர் பிரித்துக்கேட்கிறார்கள். நான் என்ன செய்ய?,தொகுதிப் பங்கீட்டு பேச்சுவார்த்தை என்ற பெயரில் உள்ளே நுழைகின்றவர்களுக்கு டீயும்,சமோசாவும் வாங்கிக் கொடுத்தே நான் இவ்வளவு காலமும் வாயக்கட்டி வயித்தக் கட்டி சம்பாதித்த காசுகள் எல்லாம் கரைந்து விடும் போலைருக்கிறது. வெறும் விசிட்டிங்கார்டு வைத்திருப்பவர்களெல்லாம் அறிவாலய செக்யூரிட்டியிடம் 50 ரூவாயைத் தள்ளிவிட்டு விட்டு பேச்சிவார்த்தை என்ற பெயரிலே உள்ளே நுழைந்து என் பெண்டை நிமித்தி விடுகிறார்கள். நான் யாரைத் தடுப்பேன். தடுக்கக் கூடிய நேரமா இது?.

என்னவோஎன் பெருமைக்குரிய தமிழக மக்களிடம் இருக்கும் ஞாபக மறதியை நம்பி இந்தத் தேர்தலிலும் மீண்டும் திராவிட முன்னேற்றக் கழகம் போட்டியிடுகிறது. மக்களே! நான் சட்டமன்றத் தேர்தலில் என்னென்ன வாக்குறுதி அளித்தேனோ அதையெல்லாம் அடுத்த சட்டமன்ற எலக்சன் அறிவிக்கும் வரை அமுல்படுத்தக் கடமைப்பட்டுள்ளேன்.அது மட்டுமின்றி வரப்போகிற எலக்சனுக்காக வேண்டி மேலும் சில இலவச திட்டங்களைப் பட்டியலிடுகிறேன்.இந்த இலவசங்களைப் பார்த்து வழக்கம் போல வாயைப் பிளந்தவாறு உதயசூரியனில் விரல்களைப் பதித்துவிடுங்கள். இந்த எலக்சன் மதுரைக்கு மட்டும் நடக்க இருந்தால் நான் உங்களை இவ்வாறெல்லாம் கேட்க மாட்டேன். காரணம் அங்கே நீங்கள் எந்த சின்னத்தில் உங்கள் விரலை வைத்தாலும் அது சூரியனையே சுத்திவரும். என்ன செய்ய என் கண்மணிகளே! என்னிடம் 40 அஞ்சா நெஞ்சர்கள் இல்லயேஇருந்திருந்தால் நான் இது போன்ற ஒரு மொக்கை கடிதத்தை என் விரல் கடுக்க வடித்திருக்க மாட்டேன் என் செல்வங்களே!

கிடப்பது கிடக்கட்டும் கிளவியைத்தூக்கி மணையில் வை என்ற கதையாக, நாடு எப்படி போனால் என்ன என்று முடிவு செய்தவனாக என் இலவசங்களைப் பட்டியலிடுகிறேன்,பாய்ந்து வந்து பிடித்துக்கொள்ளுங்கள்.

1) இதுவரை ரேசன் கடைகளில் வழங்கப்பட்ட அரிசிக்கு பதிலாக சுடச்சுட சோரும்,சுரும்பு கருவாட்டுக் குழம்பும் வழங்கப்படும்.இதனால் ஏற்கணவே வீடுகளில் சமைக்காமல் இலவச கலைஞர் டிவியே கதி என்று கிடக்கும் 2 கோடிதாய்மார்கள் பயன்பெறுவார்கள்.

2) தமிழ்நாடு ரேசன் அரிசி கடத்துவோர் சங்கம், தங்களுக்கு லாரி வாடகை கட்டஇயலவில்லை என்ற கோக்கை முன்வைத்து நடத்திய பேரணி ஆர்ப்பாட்டம் கணிவோடு பரீசீலிக்கப்பட்டு ரேசன் அரிசி கிலோ 1 ரூபாயில் இருந்து 0.50பைசாவாகக் குறைக்கப்படும்.இதன் மூலம் 80,000 ரேசன் அரிசி கடத்துவோர் பயனடைவார்கள்.

3) ஏழை விவசாயிகள் இன்னும் கூட வெறும் கோவணமே கட்டும் அவல

நிலையைக் கருத்தில் கொண்டு அவர்களுக்கு இலவச ஜட்டி வழங்க ஆவணசெய்யப்படும்.அதுமட்டுமின்றி இனிமேல் தமிழகத்தில் கோவணம் கட்டுவது தடைசெய்யப்படும். இனிமேல் தங்கர்பச்சான் போன்றவர்கள் அரசு ஜட்டிகளையே பயன்படுத்திக் கொள்ளலாம்.

4) ஏற்கனவே கூத்தாடும் குடிமகன்களுக்கு குஜால் செய்தியாக, டாஸ்மாக் விற்பனையை அதிகரிக்க, இனிமேல் குவாட்டருடன் கொண்டக்கடலையும் வாட்டர்பாக்கெட்டும், ஆஃபுடன் அவித்தமுட்டையும் அங்குவிலாஸ் சோடாவும் இலவசமாக வழங்கப்படும். இதன் மூலம் 3 கோடி டாஸ்மாக் கண்மணிகள் பயனடைவார்கள்.

5) பேரணி ஆர்ப்பாட்டம் நடத்துபவர்களுக்கு இனிமேல் போக்குவரத்து செலவை அரசே ஏற்றுக்கொள்ளும். அதுமட்டுமின்றி இனிமேல் எனக்கு அதிக பாராட்டு விழா எடுப்பவர்களுக்கு தமிழக அரசின் கலைமாமணி விருதும் வழங்கப்படும்.

6) 10 வகுப்பு முடித்த அனைத்து மாணவச் செல்வங்களுக்கும் அண்ணா பல்கலைக்கழகம் வழங்கும் எஞ்சினியரிங் சர்டிபிகேட் இனிமேல் இலவசமாக வழங்கப்படும்.

7) இளம் காதலர்களுக்கு BSNL மூலம் மாதம் தோறும் 50 ரூபாய் இலவச டாக் டைம் வழங்க ஆவண செய்யப்படும்.

8) நல்லா இருந்த மின்சாரத்தை வெட்டி வெட்டி விளையாடிய ஆற்காடு வீராசாமியால் தத்தளிக்கும் தமிழக குடும்பங்களுக்கு இலவச தீப்பந்தம் வழங்க ஆவண செய்யப்படும். அது மட்டுமின்றி தற்சமயம் ஆற்காட்டார் எங்கு,எது எரிந்தாலும் அதை உடனே சென்று அணைத்துவிடுகிறார்.